Wimbledon Tennis 2023 Final: தீ பறக்கும் இறுதிப் போட்டி.. முதல்முறை மோதும் தலைசிறந்த வீரர்கள்!
Jul 16, 2023, 06:10 AM IST
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முதல் முறையாக நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்காரஸ் மோதவுள்ளனர்.
அனல் பறக்கும் விம்பிள்டன் இறுதிப்போட்டி வந்துவிட்டது. முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் இருவரும் முதல் முறையாக மோத உள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 2023 ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில் அதிக முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர் கிறிஸ் எவர்ட். அந்த சாதனையை முறியடித்து தற்போது நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
விமில்டன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசை பட்டியலில் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், உலகின் எட்டாம் நிலை வீரரான ஜானிக் சின்னரை வீழ்த்தி ஒன்பதாவது முறை இறுதிப்போட்டியில், 35வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியை எட்டிய சாதனையை 36 வயதான நோவக் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.
கார்லோஸ் அல்காரஸ் அதிரடி போட்டியில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் விளையாடி வெற்றி பெற்றார். ஜூலை 16ஆம் தேதி அதாவது இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ், இரண்டாம் நிலை வீரரான நோவக் கோவிச்சை எதிர்கொள்கிறார்.
அதேபோல் உலகின் முதல் நிலை வீரராக விளங்கக்கூடிய கார்லோஸ் அல்காரஸோடு முதல் முறையாக நோவக் மோதுகிறார். இதுகுறித்து கார்லோஸ் அல்காரஸ், ஜோகோவிச்சிற்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட விரும்புவதாகப் பலமுறை தெரிவித்துள்ளார்.
அவர் ஆசை இந்த இறுதிப் போட்டியில் நிறைவேறப் போகிறது. உலகில் நம்பர் 1 இடத்தை வகிக்கக்கூடிய வீரரும், உலகில் நம்பர் 2 இடத்தை வகிக்கக்கூடிய வீரரும் மோதுகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தீ போல் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்