தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Netherlands: யாருமே எதிர்பார்க்கல.. சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய நெதர்லாந்து அணி

Netherlands: யாருமே எதிர்பார்க்கல.. சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய நெதர்லாந்து அணி

Manigandan K T HT Tamil

Jun 26, 2023, 09:56 PM IST

google News
West Indies: குரூப் ஏ சுற்றின் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. (@ICC)
West Indies: குரூப் ஏ சுற்றின் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

West Indies: குரூப் ஏ சுற்றின் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஏ பிரிவில் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டு விளையாடியது வெஸ்ட் இண்டீஸ். முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை குவித்தது.

ஹராரே தக்ஷின்கா ஸ்போர்ட் கிளப் மைதாநத்தில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக நிகலோஸ் பூரன் 104 ரன்களை விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமலும் நின்றார் பூரன். இது அவருக்கு ஒட்டுமொத்தமாக 3வது ஒரு நாள் கிரிக்கெட் சதம் ஆகும். இந்த உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் 2வது சதம் ஆகும்.

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் ஓபனிங் பேட்ஸ்மேன் பிராண்டன் கிங், சார்லஸ் ஆகியோர் அரை சதம் விளாசி சரியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னும் 3 ரன்கள் எடுத்திருந்தால் அவரும் அரை சதம் பதிவு செய்திருப்பார்.

கீமோ பால் 46 ரன்களுடன் பூரனுடன் களத்தில் இருந்தார்.

இவ்வாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 374 ரன்களை குவித்தது. 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடியது.

சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்து மேட்ச்சை டிரா செய்தது.

அந்த அணியின் தேஜா நிதாமனுரு சதம் விளாசினார். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 67 ரன்கள் பதிவு செய்தார்.

அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸுக்காக எடுத்தார்.

பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

அதில், 30 ரன்களை விளாசியது நெதர்லாந்து. ஜேசன் ஹோல்டர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்ஸருக்கும் விரட்டினார் வேன் பீக்.

பின்னர் 3வது பந்தை பவுண்டரிக்கும், நான்காவது மற்றும் 5வது பந்தை சிக்ஸருக்கும் பறக்க விட்டார். கடைசி பந்தை மறுபடியும் ஃபோர் லைனுக்கு விரட்டினார்.

31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், 8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டனர்.

சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.

குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி