PCB: கிரிக்கெட் வாரிய தலைவர் திடீர் ராஜினாமா.. குழப்பத்தில் பாகிஸ்தான் அணி!
Jun 20, 2023, 01:23 PM IST
Najam Sethi: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை நஜீம் சேதி ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவராக இருந்த இருந்த ரமீஷ் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து நஜீம் சேதி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்ற நஜீம் சேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு முன்னாள் சேர்மன் அஷிப் சதாரி மீண்டும் திரும்புவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் நஜீம் சேதியின் பதவிக்காலம் நாளை முடிவடைய உள்ள நிலையில் தற்போது ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு அஷிப் சதாரி, செபாஸ் ஷெரிப் ஆகியோர் போட்டி போட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நானும் போட்டி போட விரும்பவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலையற்ற தன்மை நீடிப்பது நல்லது அல்ல என்றும் சூழ்நிலைகளை பார்க்கும் போது நான் தலைவர் பதவிக்கு சரியான நபர் கிடையாது என்றும் கூறி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
இதனை அடுத்து புதிய தலைவர் நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் மூலம் நியமிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் கடிதம் ஒன்றை அளித்திருந்த நஜீம் சேதி, பாகிஸ்தானில் நிலையற்ற அரசு நீடிப்பதாக விமர்சனம் செய்திருந்தார். இதனாலே அவர் பதவியை விட்டு விலக காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, நஜீம் சேதி பொறுப்பேற்ற பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என நஜீம் சேதி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இதற்கிடையில், இந்தியா விளையாடும் போட்டியை மட்டும் வேறு நாட்டில் நடத்திக் கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை நஜீம் சேதி ராஜினாமா செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்