தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Isl 2023-24: பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை

ISL 2023-24: பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை

Nov 03, 2023, 05:11 PM IST

google News
ஐஎஸ்எல் 2023-24 சீசனில் இதுவரை ஆறு போட்டிகள் விளையாடியிருக்கும் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை அணி 5 போட்டிகளில் 11 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஐஎஸ்எல் 2023-24 சீசனில் இதுவரை ஆறு போட்டிகள் விளையாடியிருக்கும் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை அணி 5 போட்டிகளில் 11 புள்ளிகளை பெற்றுள்ளது.

ஐஎஸ்எல் 2023-24 சீசனில் இதுவரை ஆறு போட்டிகள் விளையாடியிருக்கும் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை அணி 5 போட்டிகளில் 11 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது சுற்றில் மும்பை சிட்டி எஃப்சிக்கு எதிராக பத்து பேர் கொண்ட பஞ்சாப் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 4-3-3 என்ற பார்மேஷனில் மும்பை அணி விளையாடியது.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பஞ்சாப் ஸ்டிரைக்கர் லூகா மஜ்சென் தனது அணிக்கு முதல் கோல் அடித்து முன்னிலை பெற வைத்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என பஞ்சாப் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் கோல் அடிப்பதற்காக பெரும் போராட்டத்தை வெளிப்படுத்தியது மும்பை அணி. இதன் விளைவாக ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது மும்பை. அதே நிமிடத்தில் மும்பை அணி மற்றொரு கோல் அடித்தும் பஞ்சாப்புக்கு நெருக்கடி கொடுத்தது.

மீதமிருந்த நிமிடங்கள் பஞ்சாப் அணி மேற்கொண்ட கோல் முயற்சி பலன் அளிக்கவில்லை. அத்துடன் 98வது நிமிடத்தில் பஞ்சாப் வீரர் டிமிட்ரிஸ் சாட்ஸிசியாஸ்க்கு ரெட் கார்டு பெற்றார்.

இறுதியில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

விளையாடி 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத பஞ்சாப் எஃப்சி, தனது அடுத்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை நவம்பர் 7ஆம் தேதி புது தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

தற்போதைய நிலையில் பஞ்சாப் எஃப் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்திலும், ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி