தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Dhoni In Mumbai: பகவத் கீதை புனித நூல் வைத்திருந்த எம்.எஸ்.தோனி-வைரலாகி வரும் புகைப்படம்!

Dhoni in Mumbai: பகவத் கீதை புனித நூல் வைத்திருந்த எம்.எஸ்.தோனி-வைரலாகி வரும் புகைப்படம்!

Manigandan K T HT Tamil

Jun 01, 2023, 05:46 PM IST

google News
Mumbai: பகவத் கீதையுடன் அவர் இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Mumbai: பகவத் கீதையுடன் அவர் இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Mumbai: பகவத் கீதையுடன் அவர் இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

எம்.எஸ்.தோனி கால் மூட்டில் காயம் அடைந்திருப்பதால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள மும்பை வந்தார். அவர் காரில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரது கையில் பகவத் கீதை புத்தகம் இருந்தது. இதைக் கண்ட அவரது ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்திப்பதாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்தனர்.

பகவத் கீதையுடன் அவர் இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த சீசன் முழுக்கவே மூட்டு பாதிப்புடன் விளையாடி வந்த சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக இந்த வாரம் அனுமதிக்கப்படவுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக அறுவை சிகிச்சை செய்தால் 100 சதவீதம் அவர் பிட் ஆவார் என கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த சீசனில் தோனிக்கு 42 வயதாகும் நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு முன்பு போல் செயல்பட முடியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த சூழ்நிலையில் அறுவை சிகிச்சை செய்வது பற்றி தோனி இறுதி முடிவு எடுப்பார் என தெரிகிறது. அடுத்த சீசனிலும் விளையாடவது குறித்து தோனி தெரிவித்திருப்பதை சிஎஸ்கே நிர்வாகமும் வரவேற்றுள்ளது.

ஏற்கனவே தோனி இறுதிப்போட்டிக்கு பின்னர் அளித்த பேட்டியில், ரசிகர்களின் விருப்பத்துக்காக அடுத்த சீசனிலும் விளையாட முயற்சிப்பேன் என்றார். ஆனால் அது கடினமான விஷயம் என்பது உடல்நிலை குறித்து முடிவு செய்வேன் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தோனி ஓய்வை அறிவித்துவிடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், உடல் ஒத்துழைத்தால் இன்னும் ஒரு சீசன் கிரிக்கெட் விளையாடுவேன் என கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகவே அமைந்தது.

இந்த சீசனில் மொத்தம் 57 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்கள் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோராக 32 நாட் அவுட் உள்ளது. 182.45 என சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் தோனி, 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி