தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ms Dhoni: அவரிடம் முதிர்ச்சிதனம் இருப்பதை பார்த்ததில்லை! தீபக் சஹாரிடம் தொடர் குறும்புத்தனம் ஏன்? மனம் திறந்த தோனி

MS Dhoni: அவரிடம் முதிர்ச்சிதனம் இருப்பதை பார்த்ததில்லை! தீபக் சஹாரிடம் தொடர் குறும்புத்தனம் ஏன்? மனம் திறந்த தோனி

Jul 11, 2023, 01:22 PM IST

google News
தனது வாழ்க்கையில் அவர் ஒருபோதும் முதிர்ச்சியாக நடந்துகொண்டதை பார்த்தில்லை என தீபக சஹார் குறித்து நகைச்சுவையாக கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தீபக்குடனான தனது உறவு குறித்தும் மனம் திறந்துள்ளார்.
தனது வாழ்க்கையில் அவர் ஒருபோதும் முதிர்ச்சியாக நடந்துகொண்டதை பார்த்தில்லை என தீபக சஹார் குறித்து நகைச்சுவையாக கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தீபக்குடனான தனது உறவு குறித்தும் மனம் திறந்துள்ளார்.

தனது வாழ்க்கையில் அவர் ஒருபோதும் முதிர்ச்சியாக நடந்துகொண்டதை பார்த்தில்லை என தீபக சஹார் குறித்து நகைச்சுவையாக கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தீபக்குடனான தனது உறவு குறித்தும் மனம் திறந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் தற்போது விளையாடி வரும் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா உள்பட பலரும் தோனியை தங்களது வழிகாட்டியாகவே பாவித்து வருகிறார்கள். தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டத்தில் தோனி தங்களுக்கு அளித்த ஆதரவு ஆலோசனை தொடர்பான நன்றியுணர்வை கிடைக்கும் வாய்ப்புகளின்போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

எம்எஸ் தோனி இந்திய அணிக்காக 2007 முதல் 2018 வரை 11 ஆண்டுகள் கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் முதல் சீசன் 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

கேப்டன் கூல், களத்தில் மிகவும் அமைதியாக காணப்படும் தோனி, களத்துக்கு வெளியே வீரர்களுடன் மகிழ்ச்சியான நடத்தையை வெளிப்படுத்துவது சாட்சியாக பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. குறிப்பாக சிஎஸ்கே அணியின் ஸ்டிரைக் பவுலரான தீபக் சஹாரிடம் நடந்து முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் தோனி வெளிப்படுத்திய குறும்புத்தனத்திந் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

ரைசிங் புணே ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பிடித்த இளம் பவுலரான தீபக் சஹார் பவுலிங் திறமையை நன்கு கவனித்த தோனி, பின்னர் அவரை சிஎஸ்கே அணிக்கு அழைத்து வந்தார். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பிரதான பவுலராக இருந்து வரும் தீபக் சஹார், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இவரது வருகைக்கு பிறகு சிஎஸ்கே அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

இதையடுத்து தீபக சஹாருடனான தனது உறவு குறித்து தோனி கூறியதாவது: "தீபக் ஒரு போதை மருந்து போன்றவர். அவர் இல்லாவிட்டால், எங்க இருக்கிறார் என்ற யோசிக்க தோன்றும். அவர் ஒரு வேளை அருகில் இருந்தால் ஏன் இங்கே இருக்கிறார் என தோன்றும்.

 

அவர் முதிர்ச்சி அடைந்தது கொண்டிருக்கிறார். அதற்காக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறார். அவர முதிர்ச்சியை வெளிப்படுத்தியதை வாழ்நாளில் நான் ஒருபோதும் பார்த்தில்லை." என்று கூறினார்.

கிரிக்கெட் வீரரான தோனி, சினிமாத்துறையில் நுழைந்து முதல் முறையாக தனது நிறுவனம் மூலம் எல்ஜிம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்தபோது செய்தியாளர்களிடம் நடைபெற்ற உரையாடலில் தீபக் சஹார் பற்றி இப்படி நகைச்சுவையாக கூறினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி