தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mooen Ali: நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு! காயத்துக்கு மருந்து பரிசீலித்த ரசிகையை தீவிரமாக தேடும் மொயின் அலி

Mooen Ali: நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு! காயத்துக்கு மருந்து பரிசீலித்த ரசிகையை தீவிரமாக தேடும் மொயின் அலி

Jul 18, 2023, 05:21 PM IST

google News
கை விரல் காயத்தில் ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியை மிஸ் செய்தார் மொயின் அலி. ரசிகை ஒருவர் பரிசீலித்த மருந்தை பயன்படுத்தியதன் மூலம் விரைவில் குணமடைந்து அடுத்த போட்டியில் அவர் பங்கேற்ற நிலையில், முகம் தெரியாத அந்த ரசிகைக்கு நன்றி சொல்வதற்கு தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, மான்சஸ்டரில் நாளை தொடங்குகிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிமிங்ஹாமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காத போதிலும், பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை எடுத்தார் மொயின். ஆனால் போட்டியின்போது பந்து வீசும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே ரசிகை ஒருவர் கொடுத்த மருந்தை பயன்படுத்தியதால் காயம் விரைவாக குணமடைந்தது எனவும், இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடிந்தது எனவும் கூறியுள்ள மொயின் அலி, முகம் தெரியாத அந்த ரசிகயை தீவிரமாக தேடி வருவதாக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மொயின் அலி கூறியதாவது: "எட்ஜ்பேஸ்ட் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிட்டேன். சில நாள்கள் கழித்து ரசிகை ஒருவரிடம் கடிதம் வந்தது. அதில் அவரது கணவர் எனது மிகப் பெரிய விசிறியாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆட்டத்தின் போது எனது விரலில் காயம் இருப்பதை கவனித்ததாகவும், அதற்கு MediHoney நன்கு பலன் அளிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அவரது சொன்னது போல் அந்த மருந்து நன்கு வேலை செய்து உடனடியாக காயம் குணமடைந்தது.

அவரது கடிதத்துக்கு தொடர் முடிந்தவுடன் பதில் அனுப்பலாம் என நினைத்து எனது வீட்டின் டேபிளில் வைத்திருந்தேன். ஆனால் தற்போது அது காணாமல் போயிருப்பது திகைப்பாக உள்ளது" என்றார்.

தனக்கு உதவி புரிந்த அந்த ரசிகையை தீவிரமாக தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டரான மொயின் அலி, நாளைய போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என தெரிகிறது. இந்த தொடரில், இதுவரை 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய இவரது பேட்டிங் ஆர்டர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி