MLC 2023: கப் எனக்குதான்! எகிறும் எதிர்பார்ப்பு! மீண்டும் மோத இருக்கும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள்
Jul 28, 2023, 12:41 PM IST
உச்சகட்ட பார்மில் இருக்கும் சியாடில் ஓர்காஸ் அணிக்கு எதிராக ப்ளேஆஃப் குவாலிபயர் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. ஐபிஎல் போல் எம்எல்சி லீக்கிலும் இந்த மோதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற்று வரும் எம்எல்சி என அழைக்கப்படும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரின் ப்ளேஆஃப் போட்டிகள் இன்று நடைபெற்றன. ஒரே நாளில் குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற்றன.
முதலில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி, வாஷிங்டன் ப்ரீடம் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
இதைத்தொடர்ந்து சியாட்டில் ஓர்காஸ் - டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் 1 போட்டி நடைபெற்ற. இதில் முதலில் பேட் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 127 ரன்கள் என மிகவும் எளிய இலக்கை சேஸ் செய்த சியாடில் ஓர்காஸ் 15 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கான ஸ்கோரை சேஸ் செய்தது.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், படுதோல்வி அடைந்தது. இருப்பினும் இறுதிப்போட்டிக்கு நுழைய குவாலிபயர் 2 போட்டியை விளையாடும் வாய்ப்பு டிஎஸ்கே அணிக்கு உள்ளது.
குவாலிபயர் 2 போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான மோதலாகவும், உள்ளூர் டி20 லீக் போட்டிகளில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மோதலாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டிகள் அமைந்திருக்கும்.
அந்த வகையில் இந்த இரு அணிகளின் கிளை அணிகளாக இருக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் இறுதி போட்டியில் நுழையப்போவது யார் என பலப்பரிட்சை செய்யவுள்ளது. எனவே இதை சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ அணிகள் மோதும் போட்டியாகவே ரசிகர்கள் பார்கிறார்கள். இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த இரு அணிகளும் மோதும் குவாலியபர் 2 போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தோ ஜியோ சினிமாவில் இலவசமாக காணலாம்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்