தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mirabai Chanu: ஒலிம்பிக் போட்டிக்காக உலக சாம்பியன்ஷிப் தொடரை கைவிடும் மீராபாய் சானு

Mirabai Chanu: ஒலிம்பிக் போட்டிக்காக உலக சாம்பியன்ஷிப் தொடரை கைவிடும் மீராபாய் சானு

Aug 29, 2023, 05:46 PM IST

google News
உலக தடகள சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கபோவதில்லை என இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்துள்ளனர். ஆனாலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகுதி சுற்றில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச விதிமுறைகளின்படி பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கட்டாயம் போட்டி பிரிவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதே சமயம் ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெறுவதற்கான பளுதூக்கும் சுற்றிலும், ஊக்க மருந்து பரிசோதனையிலும் அவர் பங்கேற்க அவர்கள் பங்கேற்க வேண்டும்.

அதன்படி, இந்திய நட்சத்திர வீராங்கனையான மீராபாய் சானு போட்டி பிரிவில் பங்கேற்கபோவதில்லை எனவும், பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி சுற்றில் மட்டும் பங்கேற்கபோவதாக தெரிவித்துள்ளார்.

2017 உலக சாம்பியன்ஷிப் தொடரில் 49 கிலோ எடைப்பிரிவில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, கடந்த முறை டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

செப்டம்பர் 4ஆம் தேதி ரியாத்தில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கு போட்டியில் பங்கேற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற முடியும். சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பின் விதிமுறைப்படி இந்திய வீராங்கனை மீராபாய் சானு போட்டியில் பங்கேற்காமல், தகுதி சுற்றிலும், ஊக்க மருந்து பரிசோதனையிலும் பங்கேற்க உள்ளார்.

இந்த முறை அவர் 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. காயம் காரணமாக காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியை மிஸ் செய்த மீராபாய் சானு, கடந்த மே மாதத்தில் இருந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை