தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mbappe Nose Broken: மூக்கு உடைப்பட்ட பிரான்ஸ் வீரர் எம்பாப்பே! ரத்தம் சொட்ட மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு

Mbappe Nose Broken: மூக்கு உடைப்பட்ட பிரான்ஸ் வீரர் எம்பாப்பே! ரத்தம் சொட்ட மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு

Jun 18, 2024, 02:58 PM IST

google News
காற்றில் பறந்த பந்தை ஐம்ப் செய்து எடுக்க முயற்சித்தபோது டிபெண்டராக இருந்த ஆஸ்திரியா வீரர் தோள்பட்டை மீது எம்பாப்பே தலை மோதியதில் மூக்கில் காயமடைந்து, மூக்கு உடைப்பட்ட நிலையில் ரத்த சொட்ட அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். (AP)
காற்றில் பறந்த பந்தை ஐம்ப் செய்து எடுக்க முயற்சித்தபோது டிபெண்டராக இருந்த ஆஸ்திரியா வீரர் தோள்பட்டை மீது எம்பாப்பே தலை மோதியதில் மூக்கில் காயமடைந்து, மூக்கு உடைப்பட்ட நிலையில் ரத்த சொட்ட அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

காற்றில் பறந்த பந்தை ஐம்ப் செய்து எடுக்க முயற்சித்தபோது டிபெண்டராக இருந்த ஆஸ்திரியா வீரர் தோள்பட்டை மீது எம்பாப்பே தலை மோதியதில் மூக்கில் காயமடைந்து, மூக்கு உடைப்பட்ட நிலையில் ரத்த சொட்ட அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

யூரோ 2024 கால்பந்து கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பா நாட்டை சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியான கடந்த 14ஆம் தேதி தொடங்கியிருக்கும் நிலையில், ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமா ஐந்து குரூப்களாக பிரிந்து போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆஸ்திரியாவை வீழ்த்திய பிரான்ஸ்

இதையடுத்து இந்த தொடரில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்திருக்கும் பிரான்ஸ் - ஆஸ்திரியா அணிகளுக்கு இடையிலான போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மில்லன் ஓபர் ஒரு கோல் அடித்தார். இது தவிர வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை. இரு அணி வீரர்களும் கோல் முயற்சிகளும் வீணாகின.

எம்பாப்பே மூக்கு உடைப்பு

ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் காற்றில் பறந்த பந்தை அடிப்பதற்காக பிரான்ஸ் கேப்டனும், பார்வேர்ட்டு வீரருமான எம்பாப்பே மற்றும் ஆஸ்திரியா அணி டிபெண்டர் கெவின் டான்சோவின் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது எம்பாப்பேவின் தலை, ஆஸ்திரியா வீரர் தோள்பட்டையில் பலமாக மோதியது. இதில் எம்பாப்பே மூக்கில் காயமடைந்த நிலையில், மூக்கிலிருந்து ரத்தம் சொட்ட மைதானத்தை விட்டு வெளியேறினார்.

"அவர் மோசமான நிலையில் இருக்கிறார். தற்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது மூக்கில் பிரச்னை இருக்கிறது. இந்த சம்பவம் எங்கள் அணிக்கு கரும்புள்ளியாக மாறியுள்ளது" என்று போட்டி முடிந்த பின்னர் பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் டுசெல்டார்ஃப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எம்பாப்பே காயமடைந்தது குறித்து ஆஸ்திரியா கோல் கீப்பர் தான், ரெப்ரிக்களிடம் வெளிப்படுத்தினர். அதற்கு முன்னர் இந்த மோதலுக்கு பிறகும் ஆட்டமான தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

இதைத்தொடரந்து உடனடியாக மருத்துவ குழுவினர் மைதானத்தினுள் நுழைந்தனர். அப்போதே எம்பாப்பே வெள்ளை சட்டையில் ரத்த வழிந்து ரத்த கறை படிந்ததாக மாறியது.

எம்பாப்பே வெளியேறியதும் மாற்று வீரராக ஆலிவர் ஜிரூட் உள்ளே வந்து சில நிமிடங்கள் விளையாடினார்.

அறுவை சிகிச்சை தேவைப்படாது

பிரென்ஸ் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிலிப் டயல்லோ, போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, எம்பாப்பேவுக்கு குறைந்தபட்சம் ஓய்வு தேவை எனவும், அறுவை சிகிச்சை தேவையில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்

பிரான்ஸ அணி தனது அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் எம்பாப்பே விளையாடுவது சந்தேகமே.

கடைசியாக யூரோ கோப்பையை 2000ஆவது ஆண்டில் தான் பிரான்ஸ் அணி வென்றது. இதைத்தொடர்ந்து 24 ஆண்டுகளாக இந்த தொடரில் சாம்பியன் ஆக முயற்சிக்கும் கனவு நனவாகமலேயே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி