தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Manoj Tiwary: விளையாட்டு துறை அமைச்சர்! கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன்

Manoj Tiwary: விளையாட்டு துறை அமைச்சர்! கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன்

Aug 04, 2023, 07:00 AM IST

google News
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன், மேற்கு வங்காள மாநிலம் விளையாட்டு துறை அமைச்சர் மனோஜ் திவார் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன், மேற்கு வங்காள மாநிலம் விளையாட்டு துறை அமைச்சர் மனோஜ் திவார் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன், மேற்கு வங்காள மாநிலம் விளையாட்டு துறை அமைச்சர் மனோஜ் திவார் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்திய அணிக்காக 2008 முதல் 2015 காலகட்டத்தில் 12 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியவர் மனோஜ் திவாரி. 2012 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்திருந்தார் மனோஜ் திவாரி. அதிரடியான பேட்ஸ்மேனான திவாரி இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் மாற்று வீரராகவே விளையாடி வந்தார்.

தனக்கு கிடைத்த குறைவான வாய்ப்பையும் நன்கு பயன்படுத்திய அவர் ஒரு நாள் போட்டியில் ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்துள்ளார். அதேபோல், ஒரு போட்டியில் பவுலராகவும் ஜொலித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் 2004ஆம் ஆண்டில் பெங்கால் அணிக்காக விளையாட தொடங்கினார். இதையடுத்து 19 ஆண்டுகளாக அந்த அணியில் விளையாடி வந்த மனோஜ் திவாரி, தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாவில் நீண்ட பதிவை பகிர்ந்திருக்கும் திவாரி, கிரிக்கெட் விளையாட்டுக்கு குட்பை என குறிப்பிட்டு நீண்ட எமேஷனல் போஸ்டை பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் முதல் முறையாக விளையாடிய திவாரி, பின்னர் கொல்கத்தா அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டில் கொல்கத்தா அணி வென்ற முதல் ஐபிஎல் தொடரில் வெற்றிக்கான ரன்களை அடித்தது திவாரி தான். இதன் பின்னர் ரைசிங் புணே சூப்பர் ஜெயிண்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

2021ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்த மனோஜ் திவார், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றி திவாரி, தற்போது மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறது.

37 வயதாகும் மனோஜ் திவாரி 119 முதல் தர போட்டிகளில் விளையாடி 8,752 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதங்கள் அடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி