Nikhat Zareen: சொன்ன சொல்லை காப்பாற்றிய மஹேந்திரா நிறுவனம் - குத்துசண்டை சாம்பியன் நிகத் ஜரீனுக்கு சர்ப்ரைஸ் பரிசு
Aug 10, 2023, 09:50 PM IST
உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை நிகத் ஜரீனுக்கு மஹேந்திரா நிறுவனம் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளது.
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் 2023 தொடரில் வியட்நாம் நாட்டை சேர்ந்த நுகுயென் தி தாமும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்தியா வீராங்கனை நிகத் ஜரீன். இதையடுத்து குத்துசண்டை சாம்பியனான ஜரீனுக்கு மஹேந்திரா நிறுவனம் எஸ்யூவி காரை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.
மஹேந்திரா நிறுவனத்தின் தார் காருக்கென பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. அதில், " உங்கள் இலக்கை நோக்கி ஆர்வத்துடன் பயணப்பட்டு இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று மற்றொரு மைல்கல் சாதனையை புரிந்துள்ளார் நிகத் ஜரீன். மகளிர் விளையாட்டி புதிய தரத்தை உருவாக்கியிருக்கும் அவரை கெளரவப்படுத்தும் விதமாக புதிய தார் ரக கார் பரிசாக வழங்குகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மற்றொரு டுவிட் பதிவில், " இந்தியாவின் மிகச்சிறந்த குத்துச்சண்டை சாம்பியன் இந்தியாவின் சிறந்த ஆஃப்-ரோடர் காரை பெற எல்லா வகையிலும் தகுதியானவர். உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் 2023 தொடரில் தங்கம் வென்றதற்காக புதிய தார் ரக காரை பரிசாக வழங்கு கெளரவப்படுத்தி பாராட்டியதற்காக பெருமை கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மஹேந்திரா நிறுவனம் . தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு பரிசு வழங்குவோம் என்று அறிவித்திருந்தது. தற்போது அதை செய்து முடித்துள்ளது.
மஹேந்திரா நிறுவனம் இதற்கு முன் கிரிக்கெட்டில் சாதித்த சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோருக்கும் பிரபல கார்களை பரிசாக வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13வது உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் 2023 தொடர் டெல்லியில் நடைபெற்றது. இதில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் வியட்நாம் வீராங்கனை நுகுயென் தி தாமும் என்பவரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோமுக்குப் பிறகு 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார் நிகர் ஜரீன்.
இந்திய மகளிர் குத்துசண்டை போட்டியில் ஜாம்பவான் வீராங்கனையாக திகழும் மேரி கோம், 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்