தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Mahesh Chandran: மதுரை மண் தந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் மகேஷ் சந்திரன் பஞ்சநாதனின் பிறந்த நாள் இன்று

HBD Mahesh Chandran: மதுரை மண் தந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் மகேஷ் சந்திரன் பஞ்சநாதனின் பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil

Aug 10, 2023, 06:50 AM IST

google News
மதுரையில் 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிறந்தார் செஸ் வீரர் மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்.
மதுரையில் 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிறந்தார் செஸ் வீரர் மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்.

மதுரையில் 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிறந்தார் செஸ் வீரர் மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்.

மகேஷ் சந்திரன் பஞ்சநாதன் இந்திய செஸ் வீரர் ஆவார். 2006 ஆம் ஆண்டில் ஃபிடே என்றழைக்கப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு இவருக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கியது.

மதுரையில் 1983ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பிறந்தார் மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்.

2003இல் இவர் இலங்கையில் நடந்த ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியை வென்றார். 2005ஆம் ஆண்டில் அமெரிக்க சுதந்திர தின வார இறுதியில் பிலடெல்பியாவில் 33வது உலக சதுரங்க ஓபனில் விளையாடி கமில் மிடோஸுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அதே ஆண்டில் இவர் டெக்சாசின் ரிச்சர்ட்சனில் நடந்த யூ.டீ.டீ. ஜி.எம். போட்டியில் முதலிடம் பிடித்தார்.

2008ஆம் ஆண்டில் இவர் கோலாலம்பூர் ஓபனில் நுகுயென் ஆன்ஹ துங், சடிக்கின் இருவாண்டோ மற்றும் சுசான்டோ மேகரண்டோ ஆகியோருடன் இணைந்து 3–6வது இடங்களை பகிர்ந்து கொண்டார்.

2009இல் மும்பை மேயர் கோப்பையில் அலெக்சாண்டர் அரெஸ்சேங்கோ, கொனேரு ஹம்பி மற்றும் எவ்கெஞ்சி மிரோஷ்ணி சென்கோ ஆகிய மூவருடன் இணைந்து 1-4ஆம் இடங்களை பகிர்ந்து கொண்டார்.

2010இல் கான்பரா டோபேர்ள் கோப்பையில் கலந்து கொண்டு 3-6வது இடங்களை விளாடிமிர் மலானியுக், டேவிட் ஸ்மெர்டோன், சப்தரிஷி ராய் சவுத்ரி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

2011 ஆம் ஆண்டில் 3ஆவது ஒரிஸ்ஸா சர்வதேச ஜிஎம் ஓபன் சதுரங்க போட்டியில் டிக்ரான் எல். பெட்ரோசியன் மற்றும் அபிஜித் குப்தாவுடன் 2வது–4வது இடங்களை பகிர்ந்து கொண்டார். பெர்க்லி சர்வதேச சதுரங்க போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இவர், அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தார்.

மதுரை மண் தந்தை செஸ் வீரரான மகேஷ் சந்திரன் பஞ்சநாதனுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி