தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Lyca Kovai Kings: சாய் சுதர்ஷன் அதிரடி.. 200 ரன்களை கடந்தது கோவை கிங்ஸ்-இமாலய இலக்கை எட்டிப் பிடிக்குமா திண்டுக்கல்

Lyca Kovai Kings: சாய் சுதர்ஷன் அதிரடி.. 200 ரன்களை கடந்தது கோவை கிங்ஸ்-இமாலய இலக்கை எட்டிப் பிடிக்குமா திண்டுக்கல்

Manigandan K T HT Tamil

Jun 25, 2023, 05:04 PM IST

google News
Dindigul Dragons: திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் லைக்கா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. (@TNPremierLeague)
Dindigul Dragons: திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் லைக்கா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.

Dindigul Dragons: திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் லைக்கா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் நேற்று போல் இன்றும் 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் லைக்கா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.

முதலில் விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் விளையாடவுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களாக எஸ்.சுஜய் 31 ரன்களிலும் ஜே.சுரேஷ் குமார் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். மறுபக்கம் ராம் அரவிந்த் 4 ரன்களிலும் எம்.முகிலேஷ் 34 ரன்களிலும் நடையைக் கட்டினார்.

அதிகபட்சமாக பி.சரவண குமார் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், மதிவாணன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சாய் சுதர்ஷன் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டம் பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. சேலம் எஸ்.சி.எஃப் கிரிக்கெட் கிரவுண்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் ஜெயித்துள்ளது.

புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக்கை நெல்லை வீழ்த்தியதால் 8 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது.

கோவை கிங்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3இல் ஜெயித்துள்ளது. அந்த அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

திண்டுக்கல் அணி, திருச்சி, மதுரை, சேப்பாக் ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது.

திண்டுக்கல் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக அனுபவம் வாய்ந்தவர் என்பதுடன் லாவகமாக பந்துவீசும் திறன் படைத்தவர். வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி, சரவண குமார் என அபாரமாக பந்துவீசும் ஆற்றல் படைத்தவர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.  இது திண்டுக்கல் அணிக்கு பலம் ஆகும். பேட்டிங்கில் ஷிவம் சிங், இந்திரஜித், ஆதித்ய கணேஷ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

லைக்கா கோவை கிங்ஸ் அணி, திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக், திருச்சி ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது. நெல்லை அணியிடம் மட்டும் தோல்வி கண்டது.

கோவை கிங்ஸ் அணியைப் பொறுத்தமட்டில், சுஜாய், சுரேஷ் குமார், சாய் சுதர்ஷன் என அதிரடி வீரர்கள் பலர் உள்ளனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி