தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Lkk Vs Dgd: திண்டுக்கல் அணிக்கு முதல் தோல்வி-கோவை கிங்ஸ் 4வது வெற்றி

LKK vs DGD: திண்டுக்கல் அணிக்கு முதல் தோல்வி-கோவை கிங்ஸ் 4வது வெற்றி

Manigandan K T HT Tamil

Jun 25, 2023, 06:58 PM IST

google News
TNPL 2023: கோவை கிங்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (@TNPremierLeague)
TNPL 2023: கோவை கிங்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

TNPL 2023: கோவை கிங்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிஎன்பில் கிரிக்கெட்டின் 16வது லீக் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. இது இந்த சீசனில் அந்த அணியின் 4வது வெற்றி ஆகும். திண்டுக்கல் அணிக்கு இது முதல் தோல்வி ஆகும்.

கோவை கிங்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று வீறுநடைப் போட்டுவந்த திண்டுக்கல் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் லைக்கா கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.

முதலில் விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் விளையாடவுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களாக எஸ்.சுஜய் 31 ரன்களிலும் ஜே.சுரேஷ் குமார் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். மறுபக்கம் ராம் அரவிந்த் 4 ரன்களிலும் எம்.முகிலேஷ் 34 ரன்களிலும் நடையைக் கட்டினார்.

அதிகபட்சமாக பி.சரவண குமார் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், மதிவாணன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சாய் சுதர்ஷன் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டம் பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. சேலம் எஸ்.சி.எஃப் கிரிக்கெட் கிரவுண்டில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது திண்டுக்கல் அணி.

அந்த அணியின் தொடக்க வீரர் ராகுல் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிவம் சிங் நிதானமாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார்.

விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் 1 ரன்னிலும், ஆதித்ய கணேஷ் டக் அவுட்டும் ஆனார்.

பூபதி குமார் 17 ரன்கள், கேப்டன் அஸ்வின் 5 ரன்கள், சி.சரத் குமார் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மணிமாறன் சித்தார், கேப்டன் ஷாருக் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டுகளை தூக்கினார்.

இவ்வாறாக திண்டுக்கல் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி