தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ban Vs Afg: 'தோல்வியையும் நான் ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன்'-வங்கதேச வீரர் நம்பிக்கை

BAN vs AFG: 'தோல்வியையும் நான் ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன்'-வங்கதேச வீரர் நம்பிக்கை

Manigandan K T HT Tamil

Jul 09, 2023, 05:31 PM IST

google News
'உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்களும், ஆசிய கோப்பை தொடருக்கு ஒன்றரை மாதங்களும் இருப்பதால், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனித்தனியாக திட்டமிடலாம்.' (AFP)
'உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்களும், ஆசிய கோப்பை தொடருக்கு ஒன்றரை மாதங்களும் இருப்பதால், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனித்தனியாக திட்டமிடலாம்.'

'உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்களும், ஆசிய கோப்பை தொடருக்கு ஒன்றரை மாதங்களும் இருப்பதால், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனித்தனியாக திட்டமிடலாம்.'

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் வென்றுள்ளது.

முதல் இரண்டு ஆட்டங்களில் ஜெயித்துள்ள அந்த அணி, கடைசி ஆட்டத்தில் விளையாட உள்ளது. தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

வங்கதேசத்தின் சட்டோகிராமில் சனிக்கிழமை ஆப்கானிஸ்தானிடம் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை தழுவியது வங்கதேசம்.

முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் டிஎல்எஸ் முறையில் 17 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வங்கதேச ஆல்-ரவுண்டர் மெஹிடி ஹசன் கூறுகையில், "ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், ஆப்கனிடம் தோல்வி அடைந்தது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்கிறோம்" என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தத் தொடரை இழந்ததால், எங்கெல்லாம் குறை இருக்கிறது, எங்கெல்லாம் மேம்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அவர்களுக்கு எதிராக உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை ஆட்டங்கள் இருப்பதால், எங்கள் பேட்ஸ்மேன்களின் கேம் பிளானை, எந்த பந்துவீச்சாளர்களை நாங்கள் பயன்படுத்தலாம் அல்லது அவர்களின் பேட்ஸ்மேன்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதை நாங்கள் திட்டமிடலாம்.

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்களும், ஆசிய கோப்பை தொடருக்கு ஒன்றரை மாதங்களும் இருப்பதால், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனித்தனியாக திட்டமிடலாம்.

எனவே, இந்தத் தோல்வியையும் நான் ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன். இந்த தொடரில் நாங்கள் மோசமாக விளையாடியிருந்தால், நாங்கள் மோசமான அணியாக மாறிவிட்டோம் என்று அர்த்தமல்ல என்று நான் முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தேன்.

எங்கள் சாதனை மிகவும் நன்றாக உள்ளது, நாங்கள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றோம். எங்கள் அணியின் காம்பினேஷன்கள் நன்றாக உள்ளன, வீரர்கள் நல்ல தொடர்பில் உள்ளனர். மொத்தத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார் மெஹிடி ஹசன்.

உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் முதல் போட்டி அக்டோபர் 7 ஆம் தேதி தர்மசாலாவில் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தான் எதிர்கொள்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி