Novak Djokovic: பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ஜோகோவிச்சின் பரிசுத்தொகை எவ்வளவு பாருங்க!
Jun 12, 2023, 06:32 AM IST
ஒட்டுமொத்தமாக கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் ஜோகோவிச் வென்ற 23 வது பட்டம் ஆகும்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் வெற்றி பெற்றதன் மூலம், ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் செர்பியா வீரர் ஜோகோவிச்.
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா கடந்த 2 வாரங்களாக பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது கடினமாக களிமண் தரையில் விளையாடப்படும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் பெறும் 3வது பட்டம் ஆகும்.
ஒட்டுமொத்தமாக கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட தொடரில் அவர் வென்ற 23 வது பட்டம் ஆகும். இதன்மூலம், அவர் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் சாதனையை முறியடித்தார். நடாலும், ஜோக்கோவிச்சும் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தனர். களிமண் தளத்தில் ராஜா என வர்ணிக்கப்படும் நடால் இம்முறை காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
அதேநேரம், உலகின் பல முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் பைனல் போட்டி நடந்தது. இப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்-செர்பியா வீரர் ஜோக்கோவிச் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 7-6 (7/1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார் ஜோக்கோவிச். விடாமல் மல்லுக்கட்டிய கேஸ்பர் ரூட், கடைசியில் தோற்றார்.
இந்த வெற்றி மூலம் புதிய தரவரிசை பட்டியலில் ஜோகோவிச்சை ஸ்பெயினின் கார்லஸ் ஆல்காரசை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தை தன் வசப்படுத்தினார்.
இந்த மகிழ்ச்சியான வெற்றி கோவிச்சுக்கு ரூ. 20.5 கோடியை பரிசாக வாரி வழங்கி உள்ளது. அதே சமயம் இரண்டாவது முறை பிரெஞ்சு ஓபன் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய கேஸ்பர் ரூட்டுக்கு கிராண்ட் ஸ்லாம் கோப்பை பறிகொடுத்துள்ளார். அவருக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைத்தது.
இதன்மூலம், மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார் ஜோக்கோவிச். அதாவது, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் போட்டிகளாக ஆஸி., ஓபன், யு.எஸ். ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன் ஆகிய போட்டிகளில் 3 முறை மற்றும் அதற்கு மேல் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள் பட்டியல் இதோ
செர்பிய வீரர் ஜோகோவிச் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்-10, பிரெஞ்சு ஓபன்-3, விம்பிள்டன்-7, அமெரிக்க ஓபன்-3 என்று மொத்தம் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று 'நம்பர்' ஒன் இடத்தை எட்டிப்பிடித்துள்ளார்.
அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள் விவரம் வருமாறு
ஜோகோவிச் (செர்பியா)- 23
ரபெல் நடால் (ஸ்பெயின்) -22
பெடரர் (சுவிட்சர்லாந்து) - 20
பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) - 14
ராய் எமர்சன்(ஆஸ்திரேலியா) - 12
சாம்பியன் பட்டத்துக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ஜோக்கோவிச். சாதனை புரிந்த அவருக்கு டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் சமூக வலை தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்