தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: வரலாற்று சிறப்புமிக்க போட்டி! டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இரட்டையர்கள் பற்றி சுவாரஸ்ய தகவல்

HT Sports Special: வரலாற்று சிறப்புமிக்க போட்டி! டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இரட்டையர்கள் பற்றி சுவாரஸ்ய தகவல்

Jul 06, 2023, 05:15 AM IST

google News
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டையர்கள் அறிமுக போட்டியில் விளையாடியது ஆஸ்திரேலியா அணியின் மார்க் வாக் - ஸ்டீவ் வாக் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அதற்கு முன்னதாகவே நியூசிலாந்து அணியில் மகளிர் கிரிக்கெட் இரண்டு வீராங்கனைகள் அறிமுகமாகியுள்ளனர்.

கடந்த 1984ஆம் ஆண்டில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி புதியதொரு வரலாறு படைத்தது. ஒரே தோற்றமுடைய இரட்டையர்களான லிஸ் சிக்னல் மற்றும் ரோஸ் சிக்னல் ஆகியோர் முதல் இரட்டையர்களாக இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர்கள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவுற்றது. இவர்களில் ரோஸ் சிக்னல் ஆல்ரவுண்டராகவும், லிஸ் சிக்னல் பவுலராகவும் இருந்துள்ளார்.

லிஸ் சிக்னல் 6 டெஸ்ட் மற்றும் 19 ஒரு நாள் போட்டிகள் நியூசிலாந்து மகளிர் அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால் ரோஸ் சிக்னல் ஒரேயொரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடியுள்ளார். அத்துடன் 6 ஒரு நாள் போட்டிகளும் விளையாடியுள்ளார்.

அதுநாள் வரையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் வாக் ஆகியோர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய முதல் இரட்டையர்கள் என்று கருத்தப்பட்ட நிலையில், 1992இல் வெளியான சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் சிக்னல் சகோதரிகள் நிகழ்த்திய இந்த வரலாற்று சாதனை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னர் சிக்னல் சகோதரிகள் தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இரட்டையர்கள் என தெரியவந்தது.

1962இல் பிறந்த இவர்கள் ஹாக்கி, ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளிலும் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளார்கள். இருவரும் இணைந்து ஏராளமான முதல் தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிக்காக இவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் இரட்டையர்கள் வீரர்களாக இருந்துள்ளார்கள். ஒரே மாதிரியான தோற்றத்தில் இவர்கள் இல்லாதபோதிலும், உலக கிரிக்கெட் ரசிகர்கள் வியந்து பார்க்கும் விதமாக பல்வேறு சாதனைகளும் படைத்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்த ரோஸ் சிக்னல் மற்றும் லிஸ் சிக்னல் சகோதரிகள் உள்ளார்கள். ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இந்த இரட்டையர்கள் முதன்முதலாக களமிறங்கிய வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி இன்றுதான் தொடங்கியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி