Lionel Messi: எம்எல்எஸ் லீக்கில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட மெஸ்ஸி அணி
Oct 22, 2023, 05:17 PM IST
நட்சத்திர கால்பந்து வீரர் லியோனஸ் மெஸ்ஸி முழுமையாக 90 நிமிடங்கள் விளையாடியபோதிலும், அவரது இண்டர் மியாமி அணி தோல்வியை தழுவி ப்ளேஆஃப் வாய்ப்பையும் நழுவவிட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் கால்பந்து தொடராக எம்எல்எஸ் என்ற அழைக்கப்படும் மேஜர் லீக் சாக்கர் தொடர் உள்ளது. இதில் இண்டர் மியாமி அணிக்காக அர்ஜெண்டினா அணி கேப்டனும், நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரருமான லியோனல் மெஸ்ஸி விளையாடி வருகிறார்.
இதையடுத்து ப்ளேஆஃப் சுற்று தகுதிக்கான வாய்ப்பாக அமைந்த போட்டியில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி - சார்லோட் எஃப்சி ஆகிய அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் சார்லோட் எஃசி அணி வெற்றி பெற்றதுடன் ப்ளேஆஃப் வாய்ப்பையும் பெற்றது.
செயற்கை புற்கள் கொண்ட பேங்க அமெரிக்கா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. சுமார் 74 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில், 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். இந்தப் போட்டியை காண வந்த ரசிகர்களில் ஏராளமானோர் அவரது 10ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்திருந்தனர்.
ஆட்டத்தின் 13வது நிமிடத்திலேயே சார்லோட் அணி ஸ்டிரைக்கர் கெர்வின் வர்காஸ் போட்டியின் முதல் கோல் அடித்தார். அதன் பின்னர்
ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் மியாமி வீரர் மெஸ்ஸி கோல் அடித்த நிலையில், அது ஆஃப் சைட் ஆனாதால் கொடுக்கப்படவில்லை. இதன்பின்னர் ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் மற்றொரு கோல் முயற்சி, போஸ்ட் பாரில் பட்டு ரிட்டர்ன் ஆனது. இதனால் அவரது இரண்டு கோல் முயற்சிகளும் வீணானது.
அதன் பின்னர் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற சார்லோட் அணி வெற்றி பெற்றது.
மியாமி சீசனில் 14 போட்டிகள் விளையாடிய மெஸ்ஸி மொத்தம் 11 கோல்கள் அ்டித்தார். கடைசி 6 லீக் போட்டிகளில் அவரது மியாமி அணி மூன்று தோல்வி, மூன்று டிரா என ஒரு வெற்றி கூட பெறவில்லை. ஜூலை மாதம் முதல் இந்த சீசனில் 4 வெற்றி, 4 தோல்வி, 4 போட்டிகளை டிரா செய்துள்ளது.
முன்னதாக, உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் பெரு அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா 2-0 என வெற்றி பெற்றது. இதில் மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்