தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Match Preview, Madurai Vs Kovai: கோவைக்கு பயிற்சி ஆட்டம்! மதுரைக்கு எஸ்கேப் ஆக கடைசி வாய்ப்பு

TNPL Match Preview, Madurai vs Kovai: கோவைக்கு பயிற்சி ஆட்டம்! மதுரைக்கு எஸ்கேப் ஆக கடைசி வாய்ப்பு

Jul 02, 2023, 06:40 AM IST

google News
லைக்கா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய இரு அணிகளும் டாப் 4 இடத்தில் இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பு உறுதி செய்யலாம் என்பதால் மதுரை அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கலாம்.
லைக்கா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய இரு அணிகளும் டாப் 4 இடத்தில் இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பு உறுதி செய்யலாம் என்பதால் மதுரை அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கலாம்.

லைக்கா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய இரு அணிகளும் டாப் 4 இடத்தில் இருந்து வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பு உறுதி செய்யலாம் என்பதால் மதுரை அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கலாம்.

டிஎன்பிஎல் 2023 தொடர் 24வது போட்டி சீகம் மதுரை பேந்தர்ஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.  இன்று இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டியாக மாலை 3.15 மணிக்கு திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

கோவை அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மதுரை அணி 5 போட்டிகளில் 3இல் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக முறையே 5 முதல் 7வது இடத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இதையடுத்து இன்றைய போட்டியில் மதுரை தோல்வியடைந்தால் இந்த மூன்று அணிகளுக்கும் ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்ககூடும்.

கோவை, மதுரை ஆகிய இரு அணிகளுக்கும் தங்களது கடைசி போட்டியில் வெற்றியை தழுவியுள்ளன. இவ்விரு அணிகளும் இடையே நடந்த கடைசி 5 போட்டிகளில் மதுரை 3 முறையும், கோவை 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கோவை அணியில் ஐபிஎல் அனுபவ வீரர் சாய்சுதர்சன் நல்ல பார்மில் உள்ளார். அத்துடன் அணியின் கேப்டனான மற்றொரு ஐபிஎல் அனுபவ வீரர் ஷாருக்கான் பேட்டிங்கை காட்டிலும் பவுலிங்கில் நன்கு ஜொலித்து வருகிறார். இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 371 ரன்கள் எடுத்து சாய் சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் லிஸ்டில், ஷாருக்கான் 11 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மதுரை அணியில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள ஸ்பின்னர்களான முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர். இதில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும், முருகன் அஸ்வின் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு இந்த போட்டி கடைசி லீக் ஆட்டமாக இருப்பதுடன் ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்ற அந்த அணிக்கு பயிற்சி ஆட்டமாகவே அமையக்கூடும். ஆனால் மதுரை அணியை பொறுத்தவரை தற்போதைக்கு டாப் 4 இடத்தில் இருந்தாலும், இந்த போட்டியில் தோல்வியடைந்தால் சிக்கலை சந்திக்க நேரிடும். எனவே தோல்வியை தவிர்த்து வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் பார்த்தால் மதுரை அணி பாதுகாப்பான இடத்தை பிடிப்பதற்கு இது ஒரு கடைசி வாய்ப்பாகவே அமைந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி