தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  June Sports Rewind: டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் வரை.. விளையாட்டுகள் நிறைந்த ஜூன் மாதம்

June Sports Rewind: டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் வரை.. விளையாட்டுகள் நிறைந்த ஜூன் மாதம்

Manigandan K T HT Tamil

Jun 30, 2023, 06:45 AM IST

google News
ஆஷஸ் தொடர் முதல் உலக ஸ்குவாஷ் போட்டிகள் வரை பல விளையாட்டுப் போட்டிகள் நிரம்பிய மாதமாக ஜூன் திகழ்கிறது. (@ICC)
ஆஷஸ் தொடர் முதல் உலக ஸ்குவாஷ் போட்டிகள் வரை பல விளையாட்டுப் போட்டிகள் நிரம்பிய மாதமாக ஜூன் திகழ்கிறது.

ஆஷஸ் தொடர் முதல் உலக ஸ்குவாஷ் போட்டிகள் வரை பல விளையாட்டுப் போட்டிகள் நிரம்பிய மாதமாக ஜூன் திகழ்கிறது.

ஜூன் 1: ஆசிய ஜூனியர் ஹாக்கி கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஜூன் 3: இந்திய சர்ஃபிங் ஓபன் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழகத்தின் கிஷோர் குமாரும், மகளிர் பிரிவில் கமலி மூர்த்தியும் இரட்டை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

ஜூன் 4: பிரான்சில் நடைபெற்ற லீக் 1 கால்பந்து போட்டியின் 85வது சீசன் நிறைவடைந்த நிலையில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணி சாம்பியனானது.

ஜூன் 7: ஆப்கனுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இலங்கை.

ஜூன் 10: பிரெஞ்சு ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 11: இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் ஆனது.

ஜூன் 12: தமிழ்நாடு ப்ரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் போட்டி கோவையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது.

ஜூன் 16: இங்கிலாந்து ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கியது.

ஜூன் 17: சென்னையில் நடந்த உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் எகிப்து சாம்பியனானது.

ஜூன் 18: இந்தோனேஷியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

ஜூன் 20: ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஜூன் 21: இந்திய மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது.

ஜூன் 28: ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

ஜூன் 29: ஆஸி., வீரர் ஸ்மித் டெஸ்டில் 32 வது சதம் விளாசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி