Jasprit Bumrah: மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பும் பும்ரா..வெளியானது அப்டேட்!
Jul 16, 2023, 02:01 PM IST
காயத்தில் இருந்து மீண்டு வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, தற்போது பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சியை தொடங்கி வருகிறார்கள். அவர் விரைவில் இந்திய அணியின் இணைவார் எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் முதுகுத் தண்டுவடப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை. ஐபிஎல் 16ஆவது சீசனில் இருந்தும் அவர் விலகினார்.
பி.சி.சி.ஐ., மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூஸிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த பும்ரா, சமீபத்தில் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் தற்போது பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா, விரைவில் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளார். இதில், முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பும்ரா இருக்கிறார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அதை முடித்து வந்த பிறகு, அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில், முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் பும்ரா அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து எதிர்வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், செப்டம்பரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பும்ரா இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதனிடையே ஷ்ரேயாஸ் ஐயரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, முகுது பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவரும் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து, பயிற்சியை தொடங்கி இருக்கிறார். இருவரும் உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்