IND vs WI 2nd Day: சதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால், ரோகித் - முன்னிலை வகிக்கும் இந்திய அணி!
Jul 14, 2023, 06:52 AM IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோகித் சர்மாவும் சதம் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள், டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ரோஷோ மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து இந்திய அணியின் முதல் இன்னிங்சை புதுமுக வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரூபிக் சர்மாவும். முதல் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட்டுகள் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தனர். ரோகித் சர்மா 30 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் தொடர்ந்து நிதானமாக தங்களது விளையாட்டை ஆடினார்கள். தங்களுக்கு வசமான பந்துகளை மட்டும் சரியாக அடித்து விளையாடினார்கள். 22 இன்னிங்சுக்கு பிறகு தொடக்க விக்கெட்டுக்கு நூறு ரண்களுக்கு மேல் அடித்த இந்திய ஜோடி என்று சிறப்பை பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை கடந்து முன்னிலை பெற்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் விக்கெட் இழக்காமல் முன்னிலை வகிப்பது இதுவே முதல் முறையாகும். அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே சதம் அடித்து ஜெய்ஸ்வால் அனைவரது கவனத்தையும் உயிர்த்தார்.
மறுபக்கம் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, இரண்டு சிக்சர், பத்து பவுண்டரி என 103 ரன்கள் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார். அடுத்தது ஜெய்ஸ்வாலுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடி இந்த ஜோடி இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர்.
இந்திய அணி, 113 ஓவர் முடிந்திருந்த நிலையில், முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 162 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
அப்போது ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதான்ஸே மற்றும் ஜோமல் வேரிக்கன் ஆகியோர் தல ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இன்று இரவு மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்