ISL 2023 Schedule: கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து! வெளியானது ஐஎஸ்எல் தொடரின் அட்டவணை - முதல் போட்டியில் யார் மோதல்?
Sep 08, 2023, 08:57 AM IST
பன்னிரெண்டு அணிகள் பங்கேற்கும் 10வது ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் முதல் பாதிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போன்று இந்திய கால்பந்து லீக் தொடராக இருந்து வரும் ஐஎஸ்எல் போட்டிகளுக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் இந்த தொடரான ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி நடைபெறும். இதையடுத்து இந்த ஆண்டு ஐஎஸ்எல் தொடரின் 10வது சீசன் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடருக்கான முதல் பாதி போட்டிகளின் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐஎஸ்எல் போட்டிகள் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயிண்ட்ஸ், பெங்களூரு எஃப்சி, சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால், எஃப்சி கோவா, ஹைதராபாத் எஃப்சி, ஜாம்ஷெட்பூர் எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எஃப்சி, நார்ஸ் ஈஸ்ட் யுனைடெட், ஓடிசா எஃப்சி ஆகிய அணிகளுடன் இந்த சீசனில் புதிதாக களமிறங்கும் பஞ்சாப் எஃப்சி என மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் முதல் பாதி போட்டி டிசம்பர் 29 வரை நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாள்தோறும் இரவு 8 மணிக்கு போட்டியானது தொடங்கும். இரண்டு போட்டிகள் உள்ள நாள்களில் முதல் ஆட்டம் 5.30 மணிக்கும், இரண்டாவது ஆட்டம் 8 மணிக்கும் நடைபெறும்.
சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த தொடரில் அக்டோபர் 9 முதல் 20 வரையிலும், நவம்பர் 8 முதல் 24 தேதி வரையிலும் போட்டிகள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் சென்னையின் எஃப்சி அணி தனது முதல் போட்டியில் ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஒடிசா மாநிலத்திலுள்ள கலிங்கா மைதானத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்