தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  லக்னெள அணியில் முன்னாள் பஞ்சாப் வீரர்களை சமாளிக்குமா பஞ்சாப் கிங்ஸ்

லக்னெள அணியில் முன்னாள் பஞ்சாப் வீரர்களை சமாளிக்குமா பஞ்சாப் கிங்ஸ்

Apr 15, 2023, 07:00 AM IST

LSG vs PBKS: பஞ்சாப் அணியின் பழைய வீரர்கள் ஒன்றினைந்திருக்கும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் உள்ளூர் மைதானத்தில் மூன்றாவது போட்டியில் களமிறங்குகிறது. இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் லக்னெள வெற்றி பெற்றுள்ளது.
LSG vs PBKS: பஞ்சாப் அணியின் பழைய வீரர்கள் ஒன்றினைந்திருக்கும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் உள்ளூர் மைதானத்தில் மூன்றாவது போட்டியில் களமிறங்குகிறது. இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் லக்னெள வெற்றி பெற்றுள்ளது.

LSG vs PBKS: பஞ்சாப் அணியின் பழைய வீரர்கள் ஒன்றினைந்திருக்கும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் உள்ளூர் மைதானத்தில் மூன்றாவது போட்டியில் களமிறங்குகிறது. இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் லக்னெள வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் 21வது போட்டி லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையே லக்னெள அடல் பிகாரி வாட்ச்பேய் ஏகானா மைதானத்தில் நடைபெறவுள்ளது. கேஎல் ராகுல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கெளதம், ரவி பிஷ்னோய் என முன்னாள் பஞ்சாப் வீரர்கள் இணைந்து புதிய பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Federation Cup 2024: ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியில் ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்பு

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

இதில் சிறப்பான அம்சமாக நிக்கோலஸ் பூரான், ரவி பிஷ்னோய் நல்ல பார்மில் உள்ளனர். இவர் எதிரணியின் வெற்றியை பறிப்பதில் திருப்புமுனையாக அமைவார்கள். 

இந்த முறை சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி தவிர விளையாடிய 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்ற நல்ல பார்மில் உள்ளது. அதுவும் கடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக பெற்ற த்ரில் வெற்றி நடப்பு சீசனின் மிகப் சிறந்த போட்டியாகவே அமைந்துள்ளது.

மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக பஞ்சாப் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட பூரான் தற்போது உச்சகட்ட பார்மில் இருப்பதோடு ரன்குவிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இன்றைய போட்டியில் தனது பழைய அணிக்கு எதிராக அவரது ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் மேயர்ஸ்க்கு பதிலாக, தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன் குவைன்டனை டி காக் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பஞ்சாப் அணியின் பேட்டிங் கேப்டன் ஷிகர் தவானை மட்டுமே பிரதானமாக நம்பியுள்ளது. அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழும் லயாம் லிவிங்ஸ்டன் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.

அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருக்கும் லக்னெள அணியும், பேட்டிங்கை காட்டிலும் பந்து வீச்சை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் அணியும் பலப்பரிட்ச்சை செய்யவுள்ளன.

பிட்ச நிலவரம்:

லக்னெளவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் செம்மண் ஆடுகளமும், இரண்டாவது ஆட்டத்தில் கருப்பு மணல் ஆடுகளமும் பயன்படுத்தப்பட்டது. இதில் இரண்டாவது போட்டிக்கான ஆடுகளம் பெளலர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தது. குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு பந்து நன்கு திரும்பியது. எனவே இன்றைய போட்டியில் பயன்படுத்தப்படும் ஆடுகளத்தை பொறுத்து போட்டியின் முடிவு அமையும்.

இரு அணிகளும் இதுவரை ஒரேயொரு முறை மோதிக்கொண்ட நிலையில், லக்னெள அணி வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ள லக்னெள அணி அதை தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் டாப் நான்கு இடத்திலேயே நீடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடும்.

பஞ்சாப் அணி தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியது. அதிலிருந்து மீளும் விதமாக வியூகம் அமைத்து, லக்னெளக்கு அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

டாபிக்ஸ்