Vivrant Sharma: ஆரஞ்சு ஆர்மியில் புதுமுகம்.. யார் இந்த விவ்ராந்த் சர்மா?
May 07, 2023, 09:43 PM IST
RR vs SRH: ஜம்மு-காஷ்மீர் அணிக்காக 9 டி20 போட்டிகளில் விவ்ராந்த் சர்மா விளையாடியிருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 63. மொத்தம் 191 ரன்களை விளாசியிருக்கிறார். அதேபோன்று இவர் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
விவ்ராந்த் சர்மா இன்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்காக அறிமுகமானார்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த விவ்ராந்த் சர்மா, 2 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டி அவருக்கு அறிமுக போட்டியாக அமைந்தது.
முன்னதாக, அவருக்கு தொப்பியை அணிவித்து அணிக்கு வரவேற்றார் கேப்டன் எய்டன் மார்க்ரம்.
ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருந்தது. அவரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் முயற்சி செய்தது.
எனினும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதியில் இவரை ரூ.2.6 கோடிக்கு வாங்கியது.
ஜம்மு-காஷ்மீர் அணிக்காக 9 டி20 போட்டிகளில் விவ்ராந்த் சர்மா விளையாடியிருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 63. மொத்தம் 191 ரன்களை விளாசியிருக்கிறார். அதேபோன்று இவர் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
விஜய் ஹசாரே போட்டியில் விவ்ராந்த் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக அதிக ஸ்கோர்களை விளாசிய 2வது வீரர் ஆவார்.
மொத்தம் 395 ரன்களை விளாசினார்.
50 ஓவர் உள்ளூர் கிரிக்கெட்டில், விவ்ராந்த் 124 பந்துகளில் 154 ரன்களை அடித்துள்ளார். உத்தரகண்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த ஸ்கோரை பதிவு செய்தார்.
முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 14 போட்டிகளில் விவ்ராந்த் சர்மா விளையாடியிருக்கிறார். அதில் 519 ரன்களையும் (சதம், 3 அரை சதம்) எடுத்துள்ளார். மேலும், 8 விக்கெட்டுகளையும் சுருட்டியிருக்கிறார்.
ஜம்முவில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தார் விவ்ராந்த் சர்மா. லெக்-பிரேக் கூக்லி பந்துவீச்சில் திறன் படைத்தவர். ஆல்-ரவுண்டரும் கூட. இடது கை பேட்ஸ்மேன்.
இந்த ஐபிஎல் சீசனில் விவ்ராந்த் சர்மாவின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னதாக, ராஜஸ்தான் ராய்ல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான 52 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.
ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.
120 பந்துகளில் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஐதராபாத் விளையாடுகிறது.
டாபிக்ஸ்