தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Virat Kohli: கெயில், பாபர் அசாமைத் தொடர்ந்து.. டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் அசத்தல் சாதனை!

Virat Kohli: கெயில், பாபர் அசாமைத் தொடர்ந்து.. டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் அசத்தல் சாதனை!

Manigandan K T HT Tamil

May 22, 2023, 04:50 PM IST

Centuries in T20 Cricket: டி20-இல் கெயில் மொத்தம் 22 சதங்களை பதிவு செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் 9 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
Centuries in T20 Cricket: டி20-இல் கெயில் மொத்தம் 22 சதங்களை பதிவு செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் 9 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

Centuries in T20 Cricket: டி20-இல் கெயில் மொத்தம் 22 சதங்களை பதிவு செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் 9 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் 8வது சதத்தைப் பதிவு செய்தார் விராட் கோலி. மேலும், இங்கிலாந்து வீரர் லூக் ரைட்டின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசியவர்கள் லிஸ்ட்டில் விராட் கோலி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 61 பந்துகளில் 101 ரன்களை விளாசினார் கோலி.

எனினும், அந்த ஆட்டத்தில் அவர் இடம்பெற்றிருந்த ஆர்சிபி தோல்வியைத் தழுவியது.

மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 639 ரன்களை குவித்தார். பேட்டிங் சராசரி 53.25. ஸ்டிரைக் ரேட் 139. இந்த சீசனில் அவர் 2 சதங்களையும் 6 அரை சதங்களையும் விளாசியிருக்கிறார். டி20இல் அதிகம் முறை சதம் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.

கெயில் மொத்தம் 22 சதங்களை பதிவு செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர்  அசாம் 9 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் விராட் கோலி உள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் மைக்கோல் கிலிங்கர், ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோரும் 8 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் ஏறக்குறைய 45 நிமிடங்கள் கழித்தே தொடங்கியது.

ஓபனிங் பேட்ஸ்மேனாக விராட் கோலி, கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

பிளெசிஸ் 28 ரன்கள் எடுத்திருந்தபோது நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கிலென் மேக்ஸ்வெல்லும் சொதப்பினார். மஹிபால் லோம்ரோர், பிரேஸ்வெல் ஆகியோரும் அடுத்தடுத்த சொதப்பினர். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டாகி சென்றார். ஆனால், நிதானமாக விளையாடிய அரை சதம் கடந்தார் விராட் கோலி. 35 பந்துகளில் அவர் அரை சதம் விளாசினார்.

அனுஜ் ராவத் கோலிக்கு தோள் கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் சதம் விளாசினார் கோலி. 60 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.

குஜராத்தில் நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 1 விக்கெட்டையும் யஷ் தயால் 1 விக்கெட்டையும் கைப்பற்றி கொடுத்தனர். ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் கோலி சதம் விளாசினார். அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசியிருந்தார் கோலி.

அடுத்த செய்தி