தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl Born Day: திறமையாளர்களின் களம்; இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதம் - ஐபிஎல் எனும் ஆடுகளம்

IPL Born Day: திறமையாளர்களின் களம்; இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதம் - ஐபிஎல் எனும் ஆடுகளம்

Apr 18, 2023, 06:25 AM IST

google News
IPL Born Day: சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தும் திறமையாளர்களுக்கான களமாக இருந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது.
IPL Born Day: சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தும் திறமையாளர்களுக்கான களமாக இருந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது.

IPL Born Day: சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தும் திறமையாளர்களுக்கான களமாக இருந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திறமையாளர்களின் களம்,  கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்பு அ்மைத்து தரும் தொடர் என்பதையும் கடந்து, கோடையில் ரசிகர்ளுக்கான சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவே மாறியுள்ளது. உலகம் முழுவதும் கோடானு கோடி ரசிகர்களை குதூகலப்படுத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிறந்தநாள் இன்று.

ஐபிஎல் வரலாறு

இந்தியா முழுவதும் பரவி கிடக்கும் திறமையாளர்களுக்கான களமாக ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக், 2007இல் தொடங்கப்பட்டது. இந்த ஐபிஎல் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2008 முதல் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு ஆதாரமாக இருந்து வந்த அதற்கு முன்னர் இளம் கிரிக்கெட் வீரர்களை வைத்து, இந்திய அணிக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ், ஸீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் இணைந்து நடத்தில் ஐசிஎல் தொடர் அமைந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 9 நகரங்களை மையமாக கொண்ட அணிகளுடன் 2007 முதல் 2009 வரை இந்த ஐசிஎல் தொடர்கள் நடைபெற்றன. இதன் முதல் தொடரை சென்னையை மையமாக கொண்ட சென்னை சூப்பர் ஸ்டார்ஸ அணி கோப்பையை வென்றது.

2009இல் பிசிசிஐ, ஐசிஎல் தொடர்களை அங்கீகரிக்கப்படாத லீக் என அறிவித்ததோடு, அதில் விளையாடிய வீரர்களுக்கு ஐபிஎல் விளையாட வாய்ப்பையும் மறுத்தது.

பின்னர் ஐசிஎல் கலைகப்பட்டு, பிசிசிஐ அமைப்பால் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும் ஐபிஎல் தொடர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. அத்துடன் சமரசத்துக்கு பின்னர் ஐசிஎல் வீரர்களுக்கு, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் பிசிசிஐ அனுமதி வழங்கியது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் 16வது சீசனாக இருந்து வருகிறது.

முதல் சீசன்

ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் 2007இல் உருவாக்கப்பட்டாலும் முதல் சீசனாது 2008 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. அத்துடன் இனி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் கோடை விடுமுறை நாள் கொண்டாட்டமாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் சீசனுக்கான அணிகள் ஏலம் 2008 ஜனவரியில் நடைபெற்றது. இதில் மும்பை அணி அதிகபட்சமாக 111.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரூ. 900 கோடி) விலை போனது. இந்த அணியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் வாங்கியது.

தமிழ்நாட்டை மையமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்கியது.

அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

ஐபிஎல் முதல் சீசனின் சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் ஐகானிக் வீரர்கள் என வகைப்படுத்தப்பட்டு இவர்கள் முறையை அவர்கள் சொந்த மாநிலத்தை சேர்ந்த அணிகளுக்கு விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சில வீரர்கள் மார்க்யூ வீரர்களாக வகைப்படுத்தப்பட்டு, ஐகானிக் வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் (ஹைதராபாத்) அணிகள் அவர்களை ஏலம் எடுக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டவர்வர்தான் 2007இல் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை வாங்கி கொடுத்து, தற்போது சிஎஸ்கே அணியின் அடையாளமாக திகழும் எம்எஸ் தோனி. இவர்தான் முதல் சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக உள்ளார். ரூ. 12 கோடிக்கு தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

சிஎஸ்கே என்றால் தோனி என்று கூறும் அளவுக்கு அணியை வழிநடத்தி வரும் அவர், 4 முறை ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளார்.

தோனிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

முதல் போட்டி

முதல் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளான ஏப்ரல் 18ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த கொலகத்தா அணி, பெங்களூரு பெளலர்களை துவம்சம் செய்து இமாலய வெற்றி பெற்றது. ஐபிஎல் முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை புரிந்து கொல்கத்தா வீரராக களமிறங்கிய நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டான் மெக்கல்லம்.

சிஎஸ்கே அணிக்கு முதல் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்றது. ஐபிஎல் சீசனில் அதிரடியான தொடக்கத்தை தந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் போட்டியிலேயே 240 ரன்கள் குவித்தது. இதில் சிஎஸ்கேவின் டாப் ஆர்ட் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மைக ஹசி 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

திறமையாளர்களுக்கான களம்

ஐபிஎல் தொடரானது நாடு முழுவதும் இருந்து வரும் திறமையான கிரிக்கெட் வீரரகளுக்கு சரியான களம் அமைத்து தரும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அதிலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரர்களுடன் இணைந்து அவர்களது அனுபவத்தை கற்றுகொள்ளும் விதமான வாய்ப்பை வழங்குவதற்கு தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்போது வரை அதை சீரும் சிறப்புமாக செய்து வருகிறது.

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற டி20 லீக்காகவும், பணக்கார லீக்காகவும் இருந்து வரும் ஐபிஎல் தொடர் இந்திய வீரர்கள் மட்டுமில்லாமல் பிறகு நாட்டு கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்களுக்கும், திறமையாளர்களுக்கும் சிறந்த வரப்பிரசாதமாகவே இருந்து வருகிறது.

ஏப்ரல 18, 2008இல் தொடங்கிய ஐபிஎல் ஆட்டமானது 16 ஆண்டுகளை அடைந்து தற்போது தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை