TNPL Eliminator Preview: வெளியேறப்போவது யார்? முன்னாள் சாம்பியன் மதுரையுடன் பலப்பரிட்சை செய்ய இருக்கும் நெல்லை
Jul 08, 2023, 06:20 AM IST
இதுவரை ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நெல்லை ராயல் கிங்ஸ், முன்னாள் சாம்பியன் அணியான சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.
டிஎன்பிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டி நெல்லை ராயல் கிங்ஸ் - சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. சேலத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த மாலை 7.15 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்த சீசனில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை இந்த இரு அணிகளும் வெளிப்படுத்தியுள்ளன. லீக் சுற்று முடிவில் நெல்லை அணி 5 வெற்றிகளுடன் 3வது இடத்திலும், மதுரை அணி 4 வெற்றிகளுடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளது. 2021 சீசனில் இருந்து புதிதாக களமிறங்கிய நெல்லை அணி முதல் சீசனில் 5வது இடத்தையும், கடந்த சீசனில் 3வது இடத்தையும் பிடித்தது.
இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ப்ளேஆஃப் சுற்றில் விளையாடும் நெல்லை அணி இந்த முறை பைனலுக்கு முன்னேற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். நெல்லை அணியில் ஸ்டார் வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளிவில் யாரும் இல்லை என்றாலும், லீக் சுற்று முழுவதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு கடினமாக அணியாகவே திகழ்ந்தது.
அந்த அணியின் முக்கிய வீரர்களாக குருசாமி அஜிதேஷ், அருண் கார்த்திக், பெய்யாமொழி, சோனு யாதவ் ஆகியோர் உள்ளார்கள். அஜிதேஷ், அருண் கார்த்திக் ஆகிய இருவரும் இந்த சீசனில் சதமடித்த வீரர்களாக உள்ளனர். அதேபோல் பொய்யாமொழி 11 விக்கெட்டுகளை எடுத்து டாப் பவுலர்கள் லிஸ்டில் உள்ளார்.
மதுரை அணியை பொறுத்தவரை டிஎன்பிஎல் முதல் சீசனில் இருந்தே விளையாடி வருகிறது. 2018 சீசநில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்த அணி, கடந்த முறை நான்காவது இடத்தை பிடித்தது.
மதுரை அணியில் ஸ்டார் வீரராக ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ஸ்பின்னர் முருகன் அஸ்வின் ஆகியயோர் உள்ளார்கள். இவரை தவிர ஹரி நிஷாந்த், ஜெகதீசன் கெளசிக், குர்ஜாப்நீத் சிங், அஜய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இதில் குர்ஜாம்நீத் சிங் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் விக்கெட் வீழ்த்தியவர்கள் லிஸ்டில் 3வது இடத்தில் உள்ளார்.
லீக் சுற்றில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லோ ஸ்கார் ஆட்டமாக அமைந்த அந்த போட்டியில் நெல்லை அணி பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் மிரட்டியது. இதையடுத்து அந்த ஆதிக்கத்தை இன்றைய போட்டியில் தொடர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக குவாலிபயர் 2 போட்டியில் வரும் திங்கள்கிழமை மோதும். தோல்வியுறும் அணி தொடரை விட்டு வெளியேறும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9