Ishan Kishan: ஐபிஎல் கிரிக்கெட்டில் சத்தமே இல்லாமல் சாதனை புரிந்த இஷான் கிஷன்
May 09, 2023, 11:25 PM IST
Mumbai Indians: ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடி காண்பித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 54-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. 120 பந்துகளில் 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் விளையாடியது.
இந்த ஆட்டத்தில் 16.3 ஓவர்களில் 200 ரன்களை எட்டி மும்பை வெற்றி கண்டது.
ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடி காண்பித்தார். அதில் அவர் 4 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஐபிஎல் கரியரில் 100 சிக்ஸர்களை பதிவு செய்தார் இஷான் கிஷன். அதேபோல், மொத்தம் 204 பவுண்டரிகளை விளாசியிருக்கிறார்.
எனினும் ஹசரங்கா பந்துவீச்சில் அனுஜ் ராவத்திடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இதேபோல், இந்த ஆட்டத்தில் அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 324 போர்ஸையும் 100 சிக்ஸர்களையும் விளாசியிருக்கிறார். மேலும், 3000 ரன்களையும் ஐபிஎல் கரியரில் கடந்தார்.
முன்னதாக, ஆர்சிபி முதலில் விளையாடியபோது, முதல் ஓவரின் 5வது பந்தில் 1 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி.
மும்பை வான்கடே மைதானமே ஒரு கணம் அமைதியானது. யாருமே எதிர்பார்க்கல. திடீரென ஆட்டமிழந்தார். ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும், பொறுப்பை உணர்ந்து கேப்டன் பாஃப் டு பிளெசிஸ் விளையாடினார். கோலிக்கு பிறகு களத்திற்கு வந்த அனுஜ் ராவத் வந்த வேகத்தில் 6 ரன்களுடன் நடையக் கட்டினர்.
பெரன்டோர்ஃப் முதல் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து நம்பிக்கை கொடுத்தார். பின்னர் வந்த அதிரடி மன்னன் கிலென் மேக்ஸ்வெல், பிளெசிஸுக்கு தோள் கொடுத்தார்.
இருவரும் நங்கூரமாய் நின்று மும்பை பவுலர்ஸின் பந்துவீச்சை பவுண்டரி எல்லைக்கு விரட்டி அதிர விட்டனர்.
இந்தக் கூட்டணியை உடைப்பது எந்த எதிரணியாக இருந்தாலும் அவ்வளவு ஈஸி கிடையாது. இந்த ஆட்டத்திலும் இந்தக் கூட்டணியின் மாயாஜாலம் தொடர்ந்தது. இருவருமே அரை சதம் விளாசி அசத்தினர். அணியின் ஸ்கோரும் விறுவிறுவென உயர்ந்தது. இந்தக் கூட்டணி 13வது ஓவரில் பிரித்தார் பெரென்டோர்ஃப். மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தபோது நெஹல் வதேராவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
பிளெசிஸ்-மேக்ஸ்வெல் கூட்டணி 62 பந்துகளில் 120 ரன்களை சேர்த்தது.
அவர்தான் இந்த ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார். பின்னர் வந்த லோம்ரோர் 1 ரன்னிலும் கார்த்திகேயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 15வது ஓவரில் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் கேப்டன் பிளெசிஸ்ஸும் ஆட்டமிழந்தார். பின்னர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் களமிறங்கி கலக்கினார்.
அவருக்கு துணையாக இம்பேக்ட் பிளேயர் கேதார் ஜாதவ் இருந்தார். தினேஷ் கார்த்திக் கேட்ச்சை கிரீன் கோட்டைவிட்டார். இல்லையென்றால் ஆர்சிபி அதிக ஸ்கோரை எட்டியிருக்காது.
எனினும் தினேஷ் கார்த்திக்கும் மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 30 ரன்களை விளாசினார்.
இம்பேக்ட் பிளேயரான கேதார் ஜாதவ் பெரிய அளவில் ஸ்கோர் எதுவும் பதிவு செய்யவில்லை. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பெரன்டோர்ஃப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். கிறிஸ் ஜோர்டான், கேமரூன் கிரீன், குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இவ்வாறாக அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது.
டாபிக்ஸ்