தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  M.s.dhoni New Record: மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் மற்றொரு சாதனை படைத்த தோனி!

M.S.Dhoni New Record: மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் மற்றொரு சாதனை படைத்த தோனி!

Manigandan K T HT Tamil

May 30, 2023, 01:48 PM IST

google News
Dhoni Stumping: தோனி ஸ்டம்பிங்கில் கில்லி ஆயிற்றே! இதன்மூலம் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தினார் தோனி. (PTI)
Dhoni Stumping: தோனி ஸ்டம்பிங்கில் கில்லி ஆயிற்றே! இதன்மூலம் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தினார் தோனி.

Dhoni Stumping: தோனி ஸ்டம்பிங்கில் கில்லி ஆயிற்றே! இதன்மூலம் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தினார் தோனி.

ஐபிஎல் பைனல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில்லை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்தார் சிஎஸ்கே கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி.

2வது ஓவரிலேயே சுப்மன் கில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்தார்.

ஆனால், கைமேல் வந்த கேட்ச்சை பிடிக்காமல் தீபக் சாஹர் தவறிவிட்டார். பின்னர், ரன் அவுட் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். அதனால் என்ன நான் இருக்கிறேன் நம்பிக்கை அளிக்கும் வகையில் தோனி 0.12 விநாடிகளில் ஸ்டம்பிங் செய்து கில்லை காலி செய்தார்.

தோனி ஸ்டம்பிங்கில் கில்லி ஆயிற்றே! இதன்மூலம் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தினார் தோனி. டி20 ஆட்டங்களில் 300 விக்கெட்டுகளை காலி செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்.

முன்னதாக, ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் டைட்டன்ஸ் ரன்னர் அப் ஆனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியிருக்கிறது. 2023 ஐபிஎல் சீசனை சிஎஸ்கே டிஎல்எஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஜடேஜா ஒரு சிக்ஸர், 1 பவுண்டரியை விளாசி அசத்தினார்.

வின்னிங் ஷாட் அடித்ததும் அவர் நேராக துல்லிக் குதித்தபடியோ கேப்டன் தோனியை நோக்கி ஓடினார். தோனி இந்த ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், அதிருப்தியாக இருந்தார்.

ரசிகர்களை நோக்கி கையசைத்த தோனி

கடைசி பந்தில் ஜெயித்ததை அடுத்து அவரிடம் அருகில் இருந்தவர் ஜெயித்துவிட்டோம் என கூறினார். இதையடுத்து கண்களில் கண்ணீர் ததும்ப அவர் எழுந்து மைதானத்திற்கு வந்தார். அப்போது நேரடியாக ஜடஜோ அவரிடம் வந்து ஜெயித்துவிட்டோம் எனக் கூற, அவரை அப்படியே தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த சீசனே தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த லீக்கில் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகே, தோனி களமிறங்குவார். ஆனால், பைனல் ஆட்டத்தில் தோனி முன்கூட்டியே களமிறங்கினார். எப்போதும் ஜடேஜா ஆட்டமிழந்தால் தான் தோனி களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால், இந்த ஆட்டம் அப்படியே மாறியது. ஜடஜோ ஜெயித்துக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். போட்டி முடிந்த பிறகு, ரசிகர்களின் அன்பே எங்களை ஜெயிக்க வைத்தது என்றார் ஜடேஜா.

அடுத்த செய்தி