தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mi Vs Lsg: லக்னோவில் டாஸ் ஜெயிப்பது வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்குமா? Mi, Lsg இன்று மோதல்

MI vs LSG: லக்னோவில் டாஸ் ஜெயிப்பது வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்குமா? MI, LSG இன்று மோதல்

Manigandan K T HT Tamil

May 16, 2023, 06:50 AM IST

google News
Mumbai Indians: லக்னோ அணியில் குவின்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
Mumbai Indians: லக்னோ அணியில் குவின்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

Mumbai Indians: லக்னோ அணியில் குவின்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே இன்று (மே 16) 63வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உல்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும். 16 புள்ளிகளைப் பெறும்.

15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது இடத்திற்கு வரும்.

முந்தைய 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாம்பியன் அணி என நிரூபித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ். இன்றைய ஆட்டத்தில் வென்றால் அந்த அணி ஹாட்ரிக் வெற்ற பெறும்.

தொடக்கத்தில் சொதப்பிவந்த சூர்யகுமார் யாதவ், சமீப காலமாக வெளுத்து வாங்கி வருகிறார். குஜராத்திற்கு எதிரான முந்தைய ஆட்டமுந்தைய த்தில் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார.

நெஹல் வதேரா, இஷான் கிஷன், டிம் டேவிட் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சொந்த மண்ணில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 2இல் மட்டுமே ஜெயித்துள்ளது லக்னோ. ஆர்சிபி, குஜராத், பஞ்சாப் ஆகிய அணிகள் லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.

லக்னோ அணியில் குவின்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருணால் பாண்டியா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிகோலஸ் பூரன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

லக்னோ மைதானம் ஸ்பின்னர்கள் ஏற்ற மைதானம் ஆகும். மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்காமல் கட்டுப்படுத்த லக்னோ சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் மற்றும் முதலில் ஃபீல்டிங் செய்த அணிகள் தலா 3 முறை ஜெயித்துள்ளது.

எனவே டாஸ் ஜெயிப்பது என்பது ஆட்டத்தில் பெரும்பங்கு வகிக்காது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி