தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Nicholas Pooran: ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை நிகழ்த்திய 2வது வீரர் நிகோலஸ் பூரன்!

Nicholas Pooran: ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை நிகழ்த்திய 2வது வீரர் நிகோலஸ் பூரன்!

Manigandan K T HT Tamil

May 14, 2023, 03:56 PM IST

google News
IPL Records: 4 சிக்ஸர்கள், 3 ஃபோர்ஸ் உள்பட 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து புல்லட் ரயில் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். (AFP)
IPL Records: 4 சிக்ஸர்கள், 3 ஃபோர்ஸ் உள்பட 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து புல்லட் ரயில் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

IPL Records: 4 சிக்ஸர்கள், 3 ஃபோர்ஸ் உள்பட 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து புல்லட் ரயில் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

ஐபிஎல் 2023 தொடரின் 59-வது போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து சவாலான இந்த இலக்கை விரட்டிய லக்னோ அணி ஓபனிங் பேட்ஸ்மேன் கெய்ல் மேயர் 2 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் வழக்கம்போல் பவுண்டரிகளை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இவருடன் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மன்கட்டும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். டி காக் 29 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்டோய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தது முதலே அதிரடி காட்டினார். இதனால் லக்னோ அணிக்கு தேவைப்படும் ரன்ரேட் கட்டுக்குள் இருந்தது. சிறப்பாக பேட் செய்த ஸ்டோய்னிஸ் 40 ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதற்கிடையே நிதானம், அதிரடி என மாறி மாறி விளையாடி வந்த மன்கட் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

நிகோலஸ் பூரன் மறுபக்கம் கலக்கினார். 4 சிக்ஸர்கள், 3 ஃபோர்ஸ் உள்பட 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து புல்லட் ரயில் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அணியும் 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் இந்த ஆட்டத்தில் 338.46 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார். இந்த ஸ்டிரைக் ரேட் தான் ஐபிஎல் இன்னிங்ஸில் 2வது அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் ஆகும்.

13 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த பொல்லார்டு தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டுள்ள வீரர் ஆவார். இந்தச் சாதனையை 2010இல் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக செய்தார்.

இந்த வெற்றி மூலம், 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி