தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Csk Vs Gt: மழை பெய்ததால் சுப்மன் கில் சதம் விளாசுவாரா?-குஜராத் டைட்டன்ஸ் ஜாலி ட்வீட்

CSK vs GT: மழை பெய்ததால் சுப்மன் கில் சதம் விளாசுவாரா?-குஜராத் டைட்டன்ஸ் ஜாலி ட்வீட்

Manigandan K T HT Tamil

May 28, 2023, 09:00 PM IST

google News
Shubman Gill: உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆடுகளம் தார்பாய் கவர் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.
Shubman Gill: உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆடுகளம் தார்பாய் கவர் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

Shubman Gill: உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆடுகளம் தார்பாய் கவர் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று பைனல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. ஆனால், மழை மாலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது.

இதையடுத்து, உலகின் மிகப் பெரிய மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆடுகளம் தார்பாய் கவர் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் சோகத்துடன் உள்ளனர். சில ரசிகர்கள் எப்படியாவது மேட்ச் இன்று நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏனென்றால் நாளை வேலை நாள். பலர் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

"மழை மேகங்கள் அகமதாபாத் மைதானத்தை விட்டு நகர்கின்றன. லேசான மழை மற்றும் தூறல்கள் இருக்கும். பின்னர் தூறல்களும் நிற்கும்.

மைதானத்தில் இருக்கும் வடிகால் பற்றி எனக்குத் தெரியவில்லை. நன்றாக இருந்தால், ஓவர்கள் இழக்காமல் இரவு 9.00 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும்" என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், குஜராத் அணி நிர்வாகம் ஜாலியாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளது.

அதில், 'இறுதி லீக் ஆட்டம் + ⛈️ = சுப்மன் 💯

தகுதி 2 + ⛈️ = ஷுப்மேன் 💯

இறுதி + ⛈️ = 😉🤞' என குறிப்பிட்டுள்ளது.

அதாவது, கடைசி லீக் போட்டி மற்றும் குவாலிஃபயர் 2 போட்டி நடந்தபோது மழை பெய்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது குஜராத் வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார். இரு ஆட்டங்களிலுமே குஜராத் வெற்றி கண்டது.

இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு குஜராத் டைட்டன்ஸ் இவ்வாறு ட்வீட் வெளியிட்டுள்ளது.

இதை 350க்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்துள்ளனர். 4500-க்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். பலர் கமென்ட் செய்தும் வருகின்றனர்.

முழு ஆட்டத்திற்கான கட் ஆஃப் 9.40 pm. இரவு 11.56 வரை ஆட்டம் தொடங்கவில்லை என்றால் பைனல் ஆட்டம் நாளை நடக்கும். நாளையும் ஆட்டம் நடக்கவில்லையென்றால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 11:56 க்கு முன் ஆட்டம் தொடங்கினால் 5 ஓவர் ஆட்டமாக விளையாடப்படும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி