தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hardik Pandya: ஹர்திக் பாண்டியா இங்கே!-வீடியோ வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ்

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா இங்கே!-வீடியோ வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ்

Manigandan K T HT Tamil

Mar 26, 2023, 08:01 PM IST

IPL 2023: எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
IPL 2023: எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

IPL 2023: எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அகமதாபாத் வந்தடைந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

2023 சீசன் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவில், "ஹர்திக் எங்கே இருக்கீங்க? என்று சக வீரர்கள் கேட்கிறார்கள்' கடைசியாக நான் வந்துட்டேன் என்பது போல் ஹர்திக் வீடியோவில் தோன்றுகிறார்.

டைசி லீக் ஆட்டம் பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் மற்றொரு ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியுள்ளது. முதல் சீசனில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், அதன்பிறகு ஒரு முறை கூட ஐபிஎல் டைட்டிலை வெல்லவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை (2012, 2014) டைட்டிலை ஜெயித்துள்ளது. ஐதராபாத் அணி ஒரு முறை (2016) வென்றுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி