தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Csk: வெற்றி கோப்பையை வைத்து வழிபாடு.. திருப்பதியா, தி.நகரா என குழம்பிய ரசிகர்கள்!

CSK: வெற்றி கோப்பையை வைத்து வழிபாடு.. திருப்பதியா, தி.நகரா என குழம்பிய ரசிகர்கள்!

Manigandan K T HT Tamil

May 31, 2023, 11:03 AM IST

T.Nagar: டுவிட்டரில் ஒருவர் இது திருப்பதி கோயில் என்று கூறி போஸ்ட் போட இது திருப்பதி இல்லை சென்னையில் உள்ள தி.நகர் என மற்றொரு ரசிகர் ட்வீட் போட்டுள்ளார். (Anathakrishnan L)
T.Nagar: டுவிட்டரில் ஒருவர் இது திருப்பதி கோயில் என்று கூறி போஸ்ட் போட இது திருப்பதி இல்லை சென்னையில் உள்ள தி.நகர் என மற்றொரு ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

T.Nagar: டுவிட்டரில் ஒருவர் இது திருப்பதி கோயில் என்று கூறி போஸ்ட் போட இது திருப்பதி இல்லை சென்னையில் உள்ள தி.நகர் என மற்றொரு ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஜடேஜா ஜெயித்து கொடுத்தார். இதன்மூலம், 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் சாதனையை சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ரசிகர்கள் பலர் கண்ணீர் மல்க இறைவனை மைதானத்தில் பிரார்த்தித்த காட்சிகளையெல்லாம் பார்த்தோம்.

தற்போது ஐபிஎல் நிர்வாகத்தினர் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் கோப்பையை விமானத்தில் சென்னை கொண்டு வந்தனர்.

சென்னை வந்ததும் வெற்றி கோப்பை திருப்பதி திருமலா தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு இந்தியா சிமெண்ட் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் ஆர்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சன்னிதானத்தில் கோப்பையை வைத்து சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.

டுவிட்டரில் ஒருவர் இது திருப்பதி கோயில் என்று கூறி போஸ்ட் போட இது திருப்பதி இல்லை சென்னையில் உள்ள தி நகர் என மற்றொரு ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியிருக்கிறது. 2023 ஐபிஎல் சீசனை சிஎஸ்கே டிஎல்எஸ் முறையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் ரன்னர் அப் ஆனது.

குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் பைனலில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

மழை காரணமாக ஆட்டம் காலதாமதாக தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஓவர்கள் 15ஆக குறைக்கப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 171 ரன்கள் இலக்காக சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி தேவைப்படும் ரன் ரேட்டிற்கு தகுந்தாற்போல் ஆட்டத்தை கொண்டு சென்றனர்.

 

டாபிக்ஸ்