Yuzvendra Chahal: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்தார் சஹல்-டாப் 5 wicket-taker லிஸ்ட்
May 11, 2023, 09:58 PM IST
Yuzvendra Chahal: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 பவுலர்ஸ் லிஸ்ட் இதோ.
ராஜஸ்தான் சார்பில் சஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இந்த சீசனில் இதுவரை 21 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் கேப்பை கைப்பற்றினார் சஹல். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள வீரர் என்ற ரெக்கார்டையும் தன்வசம் வைத்துள்ளார் சஹல். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையையும் படைத்தார் சஹல். இவர் மொத்தம் 143 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷர்துல் தாக்குர், ரிங்கு சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுதவிர இந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை (21) வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சஹல்.
இதையடுத்து, அவர் பர்பிள் கேப்பையும் கைப்பற்றினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 பவுலர்ஸ் லிஸ்ட் இதோ.
யுஸ்வேந்திர சஹல் 143 ஆட்டங்களில் 186 விக்கெட்டுகள், பிராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகள், பியூஷ் சாவ்லா 176 போட்டிகளில் 174 விக்கெட்டுகள், அமித் மிஸ்ரா 160 போட்டிகளில் 172 விக்கெட்டுகள், ஆர்.அஸ்வின் 195 ஆட்டங்களில் 171 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இது 56வது லீக் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜேசன் ராய் 10 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் நின்று ஆடினார். அவர் 42 பந்துகளில் 4 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உள்பட 57 ரன்களை விளாசினார்.
அவரை சஹல் வீழ்த்தினார். கேப்டன் நிதிஷ் ராணா 22 ரன்களிலும், ரசல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
ரிங்கு சிங் 16 ரன்களில் நடையைக் கட்ட, ஷர்துல் தாக்குர் 1 ரன்னில் பெவிலியன் சென்றார். இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.
120 பந்துகளில் 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது.
ராஜஸ்தான் சார்பில் சஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
டாபிக்ஸ்