தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tamim Iqbal: உலக கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதம்தான்! திடீரென ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்த வங்கதேச கேப்டன்

Tamim Iqbal: உலக கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதம்தான்! திடீரென ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்த வங்கதேச கேப்டன்

Jul 07, 2023, 02:41 PM IST

google News
ஒரு நாள் உலக்க கோப்பைக்கு இன்னும் மூன்று மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார் வங்கதேச கேப்டனும், ஸ்டார் பேட்ஸ்மேனுமான தமீம் இக்பால்.
ஒரு நாள் உலக்க கோப்பைக்கு இன்னும் மூன்று மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார் வங்கதேச கேப்டனும், ஸ்டார் பேட்ஸ்மேனுமான தமீம் இக்பால்.

ஒரு நாள் உலக்க கோப்பைக்கு இன்னும் மூன்று மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்துள்ளார் வங்கதேச கேப்டனும், ஸ்டார் பேட்ஸ்மேனுமான தமீம் இக்பால்.

வங்கதேசம் கிரிக்கெட் அணியில் கடந்த 2007 முதல் விளையாடி வருபவர் தமீம் இக்பால். 34 வயதாகும் இவர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாகவும், தற்போது அணி கேப்டனாகவும் உள்ளார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி முடிவுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

அணியின் முக்கிய வீரராகவும், கேப்டனாகவும் இருந்து வரும் இவரது அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட், 241 ஒரு நாள், 78 டி20 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார் தமீம் இக்பால். ஓபனிங் பேட்ஸ்மேனான இவர் மூன்று வகை போட்டிகளிலும் சதமடித்த வங்கதேச வீரர் என்ற பெருமையை பெற்றவராக உள்ளார்.

2007 உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி அப்செட்டாக்கியது வங்கதேச அணி. அந்த போட்டியில் இவர் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்காக வித்திட்டார். இதுபோல் பல்வேறு மறக்க முடியாத வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ்களை வங்கதேச அணிக்காக வெளிப்படுத்தியுள்ளார் தமீம் இக்பால். இதையடுத்து கடந்த ஒரு வருடமாக கை, இடுப்பு பகுதிகளில் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை விளையாடுவதற்கு தயார்படுத்திக்கொள்ளும் விதமாக நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முழுமையாக காயத்திலிருந்து குணமாகாதபோதிலும் பங்கேற்று விளையாட முடிவு செய்தார்.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இதில் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் விளையாடியது தெளிவாக தெரிந்தது.

இதைத்தொடர்ந்து பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. நாட்டுக்காக விளையாடுவோர் இவ்வாறு பொறுப்பில்லாமல் விளையாடக்கூடாது என தமீம் இக்பால் பற்றி விமர்சித்தது அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகின.

இதன் பின்னர் ஓய்வு பெறும் முடிவை அதிரடியாக அறிவித்தார் தமீம் இக்பால். ஓய்வு அறிவிப்பை செய்தியாளர்களிடம் கண்ணீருடன் விடை பெற்றார் தமீம் இக்பால். இதுகுறித்து அவர் பேசியதாவது: “இது எனது முடிவு. அணிக்காக அனைத்தையும் கொடுக்க முயற்சித்தேன். இந்த தருணம் முதல் நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியே எனது கடைசி சர்வதேச போட்டியாகும். இது திடீரென எடுத்த முடிவல்ல. சில காரணங்களுக்காக இதைப் பற்றி நான் ஏற்கனவே சிந்தித்து வந்தேன். இருப்பினும் அதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை.

ஓய்வு பற்றி எனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுத்தேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன்.

இந்த சமயத்தில் என்னுடைய சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வங்கதேச வாரிய நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட என்னுடைய பயணத்தில் உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் நம்பிக்கை வைத்தது போலவே, எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்கள் தான் வங்கதேச அணிக்காக எனது சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த உதவியாக இருந்தனர். இந்த சமயத்தில் என்னுடைய வாழ்வில் அடுத்த பயணத்துக்காக உங்களுடைய பிரார்த்தனை வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கண்கலங்கியவாறு பேசினார்.

வங்கதேச அணிக்காக கடந்த 16 வருடங்கள் விளையாடிய நட்சத்திர வீரராக இருந்துள்ளார் தமீம் இக்பால். 241 ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்கள் அடித்த இவர், 8,313 ரன்களை எடுத்துள்ளார். வங்கதேச அணிக்காக ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் என்ற சாதனைக்கு சொந்தகாரராக உள்ளார்.

கேப்டனாக 37 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 21 வெற்றிகளை அணிக்கு பெற்று தந்துள்ளார். 2023 உலக கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அணியின் முக்கிய வீரரான தமீம் இக்பால் ஓய்வு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி