Avesh Khan: ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஆவேசமாக ஹெல்மேட்டை தூக்கி எரிந்தது ஏன்? ஆவேஷ் கான் விளக்கம்
Jun 20, 2023, 01:03 PM IST
ஐபிஎல் 2023 தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பின்னர் களத்தில் பேட்ஸ்மேனாக இருந்த லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஆவேசமாக ஹெல்மட்டை பவுலிங் செய்வது போல் தூக்கி எரிந்தார். தற்போது அதனை தவறு என ஒப்புக்கொண்டதுடன் அதற்கான காரணம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் தேவை என்று இருந்தபோது த்ரில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்ற பின்னர் களத்தில் பேட்ஸ்மேனாக இருந்த லக்னோ வீரர் ஆவேஷ் கான் தனது ஹெல்மெட்டை ஆவேசமாக பவுலிங் செய்வது போல் மைதானத்தில் வீசி எரிந்தார்.
இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஐபிஎல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக ஆவேஷ் கானுக்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஆவேஷ் கான் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "என்னைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது. அதிலும் ஹெல்மேட் வீசி எரிந்த சம்பவம் பற்றியே அதிகமாக பேசப்படுகின்றன.
அந்த நிகழ்வுக்கு பின்னர் அப்படி செய்திருக்ககூடாது என உணர்ந்தேன். அந்த போட்டி வெற்றி பெற்றவுடன் வந்த உணர்ச்சி வேகத்தில் அவ்வாறு செய்துவிட்டேன். ஆனால் தற்போது அப்படி செய்தது தவறு என உணர்ந்துள்ளேன்.
இந்த சீசனுக்கு முந்தைய எனது இரண்டு ஐபிஎல் சீசன்களை ஒப்பிட்டு பார்த்தால் நான் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த சீசன் நான் எதிர்பார்த்தது போல் எனக்கு அமையவில்லை.
இருந்த போதிலும் 10 ரன்களுக்கு குறைவான எகானமி வைத்திருந்ததோடு, 4 முதல் 5 டெத் ஓவர்கள் சிறப்பாகவே பந்து வீசி என தரத்தை தக்கவைத்துக்கொண்டேன்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் கைவிரலில் பல்வேறு காயங்கள் காரணமாக பிளாஸ்டர்கள் ஒட்டியிருந்தேன். ஆனால் அணிதான் முக்கியம், மற்றவை எல்லாம் அப்புறம்தான் என்கிற எனது அணுகுமுறை அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கலுக்கு பிடித்திருந்தது.
வலிநிவாரணி, ஊசி போன்றவற்றை எடுத்துக்கொண்டு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றேன். பலரும் அதற்காக என்னை பாராட்டவும் செய்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான், இந்தியாவுக்காக 5 ஒரு நாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9