தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paul Valthaty: தோனியை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன்! நினைவிருக்கிறதா? பஞ்சாப் அணி முன்னாள் வீரர் வால்தாட்டி ஓய்வு அறிவிப்பு

Paul Valthaty: தோனியை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன்! நினைவிருக்கிறதா? பஞ்சாப் அணி முன்னாள் வீரர் வால்தாட்டி ஓய்வு அறிவிப்பு

Jul 19, 2023, 11:18 AM IST

ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகள் தொடர்ந்து விளையாடி வந்த வால்தாட்டி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.
ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகள் தொடர்ந்து விளையாடி வந்த வால்தாட்டி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகள் தொடர்ந்து விளையாடி வந்த வால்தாட்டி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.

மும்பையை சேர்ந்த 39 வயதாகும் வால்தாட்டி, மும்பை கிரிக்கெட் சங்கத்தில் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். " எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல அணிகளுக்கு விளையாடியதை பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். சேலஞ்சர் கோப்பை தொடரில் இந்தியா ப்ளூ, இந்தியா U19 அணி, மும்பை சீனியர் அணி மற்றும் அனைத்து வயதுக்கான அணிகளில் விளையாடியுள்ளேன். இந்த தருணத்தில் எனக்கும் எப்போது ஆதரவு அளித்த பிசிசிஐ மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றியை சொல்லும் வாய்ப்பாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

அதேபோல், "ஐபிஎல் போட்டிகளில் எனக்கு வாய்ப்பு அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஐபிஎல் தொடரில் சதமடித்த நான்காவது இந்தியராகவும், முதல் மும்பை பேட்ஸ்மேனாகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நாயகான 2011 சீசனில் ஜொலித்தவர் வால்தாட்டி. அந்த சீசனில் உச்ச கட்ட பார்மில் இருந்த வால்தாட்டி ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய வால்தாட்டி, 63 பந்துகளில் 120 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் முறையாக பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்த போட்டியாக அது அமைந்தது. தோனியை கண்கட்டி வித்தை காட்டிய வால்தாட்டி, அவர் விரித்த அத்தனை வலையிலும் சிக்காமல் இருந்தார். சிஎஸ்கே ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது இந்த போட்டி.

இந்த சீசனில் 14 போட்டிகளில் 463 ரன்கள் குவித்த அதிக ரன்கள் அடித்த வீரர்களில் 6வது இடத்தை பிடித்தார். அத்துடன் டாப் 10 இடத்தை பிடித்த ஒரே Uncapped வீரர் என்ற பெருமையும் பெற்றார். பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட இவர் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 2013 சீசன் வரையில் பஞ்சாப் அணியில் தொடர்ந்து இடம்பிடித்திருந்தாலும், அவர் ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. பஞ்சாப் அணிக்கு முன்னரே 2009 மற்றும் 2010 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார் வால்தாட்டி.

2002இல் U19 கிரிக்கெட் உலகக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடைபெற்ற போது இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார் வால்தாட்டி. அந்த தொடரில் வங்கதேச அணி பவுலர் வீசி பவுன்சர் ஒன்று வால்தாட்டி கண்கள் அருகே தாக்கிவிட, கண்களில் பேன்டேஜ் அணிந்தவாறு வீடு திரும்பினார்.

இதன் தாக்குதலில் கண்பார்வை சிறிய பறிபோனதுடன், பார்வை குறைபாடும் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 ஆண்டுகள் கழித்து உரிய பயிற்சி, சிகிச்சை பின் பார்வை திறன் மேம்பட்ட நிலையில் கிரிக்கெட் போட்டி விளையாட தொடங்கியுள்ளார். அவருக்கு பார்வை குறைபாடு இருப்பது குறித்து பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி