IPL 2023: கேமரூன் கிரீன் கேட்ட கேள்வி.. இஷான் புன்னகையுடன் பதில்!
Mar 22, 2023, 02:17 PM IST
WPL 2023: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மும்பை இண்டியன்ஸ் வீரர்களான இஷான் கிஷனும், கேமரூன் கிரீனும் ரிப்போர்ட்டர்கள் போல் மாறி, அவர்களுக்குள்ளே மாறி மாறி கேள்வி கேட்டுக் கொண்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
இந்த சீசன் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
லீக் ஆட்டங்கள் மே 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடைசி லீக் ஆட்டம் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டி ஆண்டுதோறும் திருவிழா போல நடந்து வருகிறது.
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறிய முதல் அணி ஆனது.
இந்நிலையில் தான் இஷான் கிஷனும், கேமரூன் கிரீனும் ஜாலியாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரெஸ் கான்ஃபரென்ஸை நடத்திக் கொண்டனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அப்போது அவர்கள் பேசிக் கொண்டனர்.
அப்போது கேமரூன் கிரீன் இஷானிடம் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் ஆட்டத்திறன் இதுவரை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்.
அதற்கு இஷான், இதுவரையிலான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் பயணம் சிறப்பாக இருக்கிறது. சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்கிறார்.
இஷானும், கிரீனிடம் உங்களுக்கு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடப்போவது எப்படி இருக்கிறது. மகளிர் ஐபிஎல்-ஐ எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு அவர், இது ஒரு அற்புதமான முயற்சி. உலகெங்கும் மகளிர் கிரிக்கெட் மீது பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.
எனக்கு தேவையான பதில்கள் கிடைத்துவிட்டது. வாங்கள் கிளம்பலாம் என்று முடிக்கிறார் இஷான் கிஷன்.
இதுவொரு ஜாலியான நேர்காணலாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாபிக்ஸ்