தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2022: ரோஹித்துக்கு பர்த்டே பரிசு! மும்பைக்கு சிக்ஸருடன் கிடைத்த முதல் வெற்றி

IPL 2022: ரோஹித்துக்கு பர்த்டே பரிசு! மும்பைக்கு சிக்ஸருடன் கிடைத்த முதல் வெற்றி

May 01, 2022, 08:07 AM IST

google News
எல்லாம் முடிந்து போன பிறகு மீதமுள்ள போட்டிகளில் சம்பிரதாயமாக விளையாடி வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர், முதல் வெற்றியுடன் மும்பை அணி தனது ஆட்டத்தை நடப்பு சீசனில் ரொம்புவும் லேட்டாக ஆரம்பித்துள்ளது. (PTI)
எல்லாம் முடிந்து போன பிறகு மீதமுள்ள போட்டிகளில் சம்பிரதாயமாக விளையாடி வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர், முதல் வெற்றியுடன் மும்பை அணி தனது ஆட்டத்தை நடப்பு சீசனில் ரொம்புவும் லேட்டாக ஆரம்பித்துள்ளது.

எல்லாம் முடிந்து போன பிறகு மீதமுள்ள போட்டிகளில் சம்பிரதாயமாக விளையாடி வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர், முதல் வெற்றியுடன் மும்பை அணி தனது ஆட்டத்தை நடப்பு சீசனில் ரொம்புவும் லேட்டாக ஆரம்பித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாடி விட்டு செல்ல வேண்டியது மட்டுமே மும்பை அணிக்கு பாக்கி உள்ளது. இனி வரும் போட்டிகளில் அவர்கள் பெறும் வெற்றிகள், ஏற்கனவே பெற்றுள்ள தொடர் தோல்விகளுக்கு மருந்தாகவே அமையும். ஆனால் மும்பை பெறும் ஒவ்வொரு வெற்றியும் எதிரணியினருக்கு சிக்கலையும், தலைவலியையும் ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

மும்பை அணிக்கு பயனற்றதாக அமையும் அவர்களின் வெற்றிகள், இதர அணிகளை சீ-ஸா விளையாட்டு போல் புள்ளிப்பட்டியலில் ஏற்ற இறக்கங்களை மாறி மாறி உருவாக்கும். அந்த வகையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடப்பு சீசனில் கடைசி ஓவரில் மும்பை அணி பெற்ற த்ரில் வெற்றி அவர்களுக்கு நிம்மதி அளத்தாலும், எதிரணியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக அமைந்து அவர்களின் நிம்மதியை குலைத்துள்ளது எனலாம்.

தொடக்கத்தில் பேட்டிங்குக்கு சாதமாகவும், பின்னர் ஸ்பின்னர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதமாக அமைந்த பிட்சில் 158 ரன்கள் என டிசண்டான ஸ்கோரை எடுத்தது ராஜஸ்தான் அணி.

இதை சேஸ் செய்ய தொடங்கியபோது மும்பை அணியின் ஓபனர்கள் வழக்கம்போல் இன்றும் சொதப்பினர். முதல் பலியாக பர்த்டே பாய் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் வெளியேறினார். தனது பிறந்தநாளிலாவது ஸ்பெஷல் இன்னிங்ஸை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றினார். கோலி போல் இவரும் பேட்டிங்கில் பார்ம் அவுட்டில் தவித்து வருகிறார். ஆனால் கோலி அரைசதம் அடித்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியுள்ளார். இப்போது ரோஹித்தும் அவரைப் போல் மீள்வாரா என மற்றொரு நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. 

பேட்டிங் செய்வதை சுத்தமாக மறந்தது போல் பயந்து ஆடி வந்த இஷான் கிஷன், கொஞ்சம் தைரியமாக விளையாடினார். 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவர் வெளியேற அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஆகியோர் நங்கூரமிட்டு விளையாடினர்.

தொடர் தோல்விக்கு இன்றைய போட்டியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டே இருவரும் விளையாடினர். இதனால் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றவாறு அணியின் ஸ்கோர் உயர்ந்தது. தனது வழக்கமான பாணியான ப்ரீ ஸ்டைலில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து 39 பந்துகளில் 59 ரன்களில் சுருண்டார். இவரைத் தொடர்ந்து அற்புதமாக விளையாடி வந்த திலக் வர்மாவும் 35 ரன்களில் அடுத்த இரண்டு பந்துகளில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருவரும் இணைந்து 81 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்த நிலையில் அணியின் ஸ்கோர் 122 என இருந்தது. 28 பந்துகளில் 37 ரன்கள் தேவை என இருந்த நிலையில் பொல்லார்டு அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்யாமல் பந்துகளை வீணாக்கி கொண்டிருந்தார்.

இதனால் ஆட்டத்தில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதிரடி மோடுக்கு மாறிய டிம் டேவிட்ஸ் 9 பந்துகளில் 20 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்று இருந்தபோது ஸ்லோவாக ஆடி வந்த பொல்லார்டு முதல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய டேனியல் சாம்ஸ் சிக்ஸருடன் அணிக்கு சிசீனின் முதல் வெற்றியை தேடித்தந்தார்.

ப்ளேஆபிலிருந்து வெளியேறிய பிறகு சம்பிரதாயமாக விளையாட வேண்டிய போட்டியில் முதல் வெற்றிய பதிவு செய்து, இனி தங்களது அணி பெறப்போகும் வெற்றிகள் எதிரணிக்கு தலைவலியாக அமையும் என்று சிக்னல் காட்டியுள்ளது.

மும்பை அணிக்காக பேட்டிங்கில் தொடர்ச்சியாக ரன்குவிப்பில் ஈடுபட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி