Asian Games: பயிற்சியில் காயம்! ஆசிய விளையாட்டில் இருந்து வெளியேறிய வினேஷ் போகத் - அவரது இடத்தை பிடித்த இளம் வீராங்கனை
Aug 16, 2023, 11:08 AM IST
பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். காயத்துக்காக மும்பையில் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
சீனாவில் உள்ள ஹங்ஷே நகரில் ஆசிய விளாயாட்டு போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறவுள்ளன. இந்த தொடரில் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகழ் பங்கேற்கவுள்ளனர்.
இதையடுத்து இந்த தொடருக்கான பயிற்சியின்போதது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காயமடைந்தார். இடது முழங்காலில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மும்பையில் வினேஷ் போகத் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் நிலையில் அவர் ஆசிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வினேஷ் போகத் தனது சமூக வலைத்தளபக்கத்தில், " சோகமான செய்தியை பகிர்கிறேன். கடந்த இரு நாள்களுக்கு முன் பயிற்சியின்போது இடதுகாலில் காயம் ஏற்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே அறுவை சிகிச்ச்சைக்காக ஆகஸ்ட் 17ஆம் தேதி மும்பை செல்கிறேன்.
2018ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக விளையாடிய தங்க பதக்கத்தை வென்றேன். அதை தக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தெரியபடுத்திவிட்டேன்.
இந்த நேரத்தில் ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு துணை நின்று ஆதரவு அளிக்க வேண்டும். விரைவில் குணமாகி 2024இல் பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வினேஷ் போகத் வெளியேறியிருக்கும் நிலையில் வளர்ந்து வரும் வீராங்கனையான ஆன்டிம் பங்கல் அவருக்கு பதிலாக பங்கேற்கவுள்ளார். 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் வினேஷ் போகத்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்