INDW vs BANW: கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா! டை ஆன போட்டி - சமனில் முடித்த வங்கதேச தொடர்
Jul 22, 2023, 07:06 PM IST
வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் விதமாக அமைந்த வங்கேதச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்டது இந்திய மகளிர் அணி.
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டியாக அமைந்த இந்த தொடரில் முதல் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது போட்டியில் இந்தியா அணியும் வெற்றி பெற்றது.
இதனால் 1-1 என்ற சமநிலையுடன் இருந்த இந்த இரு அணிகளும் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இன்று மோதின. மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது. இதில் 50 ஓவர் முடிவில் வங்கதேசம் மகளிர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஓபனிங் பேட்டர் ஃபர்கானா ஹோக் சதமடித்து 107 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 226 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க பேட்டர் ஸ்மிருதி மந்தனா 59 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டர் பேட்டர் ஹர்லீன் தியோல் 77 ரன்கள் எடுத்தார்.
இதன்பின்னர் மற்ற பேட்டர்கள் பெரிய அளவில் ஸ்கோர் எடுக்க தவறினார். இருப்பினும் மிடில் ஆர்டரில் பேட் செய்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்து வந்தார். கைவசம் ஒரு விக்கெட் மட்டும் இருக்க ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், போட்டி டை ஆனது. இதையடுத்து வெற்றிக்கு ஒரு ரன் மட்டும் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட டெயில் பேட்டர் மேக்னா சிங் எதிர்பாராத விதமாக அவுட்டானார்.
இந்த விக்கெட்டால் போட்டி வெற்றி தோல்வியின்றி டை ஆனது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது.
சிறப்பாக விளையாடி வந்த இந்திய மகளிர் அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஒரு வழியாக வெற்றியின் அருகில் சென்ற இந்தியா கடைசி நேரத்தில் கோட்டை விட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்