INDvsWI: மழை குறுக்கீடு! இந்திய பவுலர்களுக்கு பதிலடி - நிதானம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள்
Jul 22, 2023, 10:04 PM IST
எந்த அவசரமும் காட்டாமல் இந்திய பவுலர்களை நிதானமாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள். ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் உணவு இடைவேளை வரை ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 438 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது.
இந்த போட்டி கோலிக்கு 500வது சர்வதேச ஆட்டமாக அமைந்திருக்கும் நிலையில், சதமடித்து சாதனை புரிந்தார். அணியின் அதிகபட்ச ஸ்கோராக கோலி 121 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 80, ஜடேஜா 61, ஜெய்ஸ்வாஸ் 57, அஸ்வின் 56 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களில் ரோச், வாரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹோல்டர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. டேகனரின் சந்தர்பால் 33 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடரந்த வெஸ்ட் இண்டீஸ் உணவு இடைவேளை வரை கூடுதலாக 31 ரன்கள் எடுத்திருப்பதுடன், மேலும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
இன்றைய நாள் ஆட்டம் தொடங்கி 10 ஓவர்கள் வீசப்பட்ட பிறகு மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.
அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் என்று இருந்தது. அறிமுக வீரராக களமிறங்கிய முகேஷ் குமார் தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார். உணவு இடைவேளை வரை தொடர்ந்து மழை நீடித்த நிலையில் ஆட்டம் தொடரவில்லை.
தற்போது மழை நின்றுவிட்ட நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்