தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Shock Video: பிரபல ஜிம் பயிற்சியாளர் உயிரிழப்பு ..உடற்பயிற்சியின் போது விபரீதம்!

Shock Video: பிரபல ஜிம் பயிற்சியாளர் உயிரிழப்பு ..உடற்பயிற்சியின் போது விபரீதம்!

Karthikeyan S HT Tamil

Jul 22, 2023, 10:11 AM IST

google News
Gym Trainer Dies: இந்தோனேசியாவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Gym Trainer Dies: இந்தோனேசியாவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Gym Trainer Dies: இந்தோனேசியாவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் பாலி பகுதியில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி என்பவர் உயிரிழந்தார்.

இந்தோனேசியாவின் பாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் விக்கி. ஜிம் பயிற்சியாளரான இவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் ஜெஸ்டின் பிரபலமான நபராக அறியப்பட்டு வந்தார். மேலும், இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ஜெஸ்டின் ஜிம்மில் வழக்கமான உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். சுமார் 210 கிலோ எடையை பார்பெல்லில் (Barbell) வைத்து தோல்களில் சுமந்தபடி ஸ்குவாட் செய்ய முயன்றார். அப்போது திடீரென எடை தூக்கும் கருவி ஜெஸ்டின் கழுத்தில் விழுந்தது. அதிக எடை கொண்ட எடை தூக்கும் கருவி கழுத்தில் விழுந்ததில் ஜெஸ்டினின் கழுத்து முறிந்தது.

மேலும், அவரது இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய நரம்பிலும் பலத்த காயமடைந்தது. இதையடுத்து ஜஸ்டின் விக்கி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜெஸ்டின் உயிரிழந்தார்.

ஜெஸ்டினின் உயிரிழப்பு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாரடைஸ் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜெஸ்டின் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பதை விட மேலானவர். அவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்" என்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி