Yuki Bhambri: ஏடிபி டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சாம்பியனான இந்திய வீரர் யூகி பாம்ப்ரி!
Jul 02, 2023, 03:47 PM IST
ஹாரிஸ் மட்டுமே ஒருமுறை இரட்டையர் மற்றும் இரண்டு முறை ஒற்றையர் பிரிவில் ஏடிபி டூர் பைனலுக்கு முன்னேறியிருந்தார்.
ஸ்பெயினில் நடந்த மல்லோர்கா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏடிபி 250 இறுதிப் போட்டியில் இந்தியாவின் யூகி பாப்ரி-தென் ஆப்பிரிக்காவின் ராபின் ஹாரிஸ் ஜோடி, பிலிப் ஆஸ்வால்ட் (ஆஸ்திரியா)-ராபின் ஹாஸ் (நெதர்லாந்து) ஜோடியை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
யூகி பாப்ரி, லாய்டு ஹாரிஸ் ஆகிய இருவருக்குமே இதுவே முதல் ஏடிபி பட்டம் ஆகும்.
ஹாரிஸ் மட்டுமே ஒருமுறை இரட்டையர் மற்றும் இரண்டு முறை ஒற்றையர் பிரிவில் ஏடிபி டூர் பைனலுக்கு முன்னேறியிருந்தார்.
30 வயதாகும் யூகி பாப்ரி கூறுகையில், "நிச்சயமாக மிகவும் நன்றாக இருந்தது. இந்த வாரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்கள் சென்றோம். நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம். போட்டியை தீவிரமானதாக கருதி சிறப்பாக விளையாடினோம். இது ஒரு சிறந்த நகரம், ஒரு சிறந்த இடம். நான் இங்கு விளையாடுவதை மிகவும் ரசித்தேன. என்னைப் பொறுத்தவரை, இது ஒரு போனஸ் மட்டுமே என்றார் பாப்ரி.
இந்த வெற்றியின் மூலம் ஏடிபி இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி தரவரிசையில் 58-வது இடத்துக்கு முன்னேற உள்ளார்.
யூகி பாம்ப்ரி இணைக்கு விளையாட்டு உலகம் வாழ்த்து தெரிவித்து வருகிறது.
மல்லோர்கா சாம்பியன்ஷிப் என்பது ஏடிபி டூர் ஒரு தொழில்முறை டென்னிஸ் போட்டியாகும். ‘ஏடிபி 250’ போட்டியாக வகைப்படுத்தப்பட்ட இந்த போட்டி ஆண்டுதோறும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஜூன் மாதம் ஸ்பெயினின் மல்லோர்கா, சான்டா பொன்சாவில் உள்ள மல்லோர்கா கன்ட்ரி கிளப்பின் வெளிப்புற புல் மைதானங்களில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வு ஆரம்பத்தில் டபிள்யூ.டி.ஏ சுற்றுப்பயணத்தில் ஒரு போட்டியாக நடத்தப்பட்டது. 2014 ம் ஆண்டு ஜூனில், மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூ.டி.ஏ) மல்லோர்காவில் ஒரு புதிய கிராஸ் கோர்ட் டென்னிஸ் போட்டி நடத்தப்படும் என்று அறிவித்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்