Korea Open Badminton: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி!
Jul 18, 2023, 06:39 PM IST
P.V.Sindhu: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து மெயின் டிராவில் விளையாடவுள்ளார்.
இந்தியாவின் பேட்மின்டன் நட்சத்திரங்களான சாத்விக்-சிராக் ஷெட்டி இணை, தாய்லாந்து இணையான ஜோம்கோ- கெத்ரென் ஜோடியை 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.
சீனாவின் ஹி ஜி டிங்- சோ ஹாவோ டாங் ஜோடியை அடுத்த சுற்றில் எதிர்கொள்கிறது சிராக் இணை.
கொரியா ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனிடையே, துரதிர்ஷ்டவசமாக, மற்றொரு இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான எம்.ஆர்.அர்ஜூன் மற்றும் துருவ் கபிலா ஆகியோர் எட்டாவது நிலை வீரர்களான சீனாவைச் சேர்ந்த லியு யு சென் மற்றும் ஓ சுவான் யி ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
காயம் காரணமாக இந்திய இணை பின்வாங்கியது. இதனால், சீன இணை வெற்றி பெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் டான் ஜியா ஜீக்கு எதிரான முதல் தகுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஹர்ஷித் அகர்வால், தென் கொரியாவின் சோய் பியோங் கேங்கிடம் 3 ஆட்டங்களில் தோல்வியடைந்து மெயின் டிராவில் முன்னேறத் தவறிவிட்டார். அவர் 15-21, 21-10, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து மெயின் டிராவில் விளையாடவுள்ளார்.
கொரியா ஓபன் என்பது தென் கொரியாவின் சியோலில் வருடம் தோறும் நடக்கும் பேட்மிண்டன் போட்டியாகும்.
2007 ஆம் ஆண்டில் தொடங்கி பி.டபிள்யூ.எஃப் சூப்பர் சீரிஸ் போட்டிகளில் ஒன்றாக மாறியதால் இந்த போட்டி கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் என்று அழைக்கப்பட்டது.
2018 முதல் பி.டபிள்யூ.எஃப் நிகழ்வுகள் கட்டமைப்பில் ஏழு பி.டபிள்யூ.எஃப் உலக டூர் சூப்பர் 500 நிகழ்வுகளில் ஒன்றாக கொரியா ஓபனை பி.டபிள்யூ.எஃப் வகைப்படுத்தியது.
இந்த போட்டி 1991 முதல் நடத்தப்படுகிறது, இருப்பினும் 1998ம் ஆண்டு மட்டும் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளிலும் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆடவர் இரட்டையர் பிரிவில் தென் கொரிய வீரர்கள் காங்-சியோ இணை சாம்பியன் பட்டம் வென்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்