Rio ISSF World Cup: 50மீ ரைபிள் சுடுதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை நீச்சல்! இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்
Sep 19, 2023, 03:27 PM IST
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் உலக தூப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை நிச்சல், மகளிருக்கான 50மீ ரைபிள் சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
முதல் முறையாக சீனியர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றிருக்கும் நீச்சல், முதல் தொடரிலேயே வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா தற்போது வரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
மகளிருக்கான 50மீ ரைபிள் 3P (3 பொஷிஷன்கள்) சுடுதல் இறுதிப்போட்டியில் நார்வே நாட்டை சேர்ந்த ஜீனெட் ஹெக் டூஸ்டாட் தங்கம் வென்றார். இவருக்கு அடுத்தபடியாக 458.0 புள்ளிகள் பெற்று நீச்சல் வெள்ளி பதக்கம் வென்றார்.
இதுகுறித்து நீச்சல் கூறியதாவது:
"இது எனது முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி. இதில் நான் பதக்கத்தை வென்றிருப்பது மகிழ்ச்சி" என்றார்.
தொடக்கத்தில் எலிமினேஷன் சுற்றில் மொத்த 73 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 18 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த சுற்றில் 587 ஷாட்கள் சுட்டு எளிதாக தகுதி பெற்றார். அதன் பின்னர் தகுதி சுற்றில் 592 ஷட்களை சுட்டதுடன், அதில் 200 ஷாட்கள் பெர்பெக்டாக டார்கெட்டு சுட்டு வீழ்த்தியுள்ளார். இதன் முலம் கடந்த ஆண்டில் இந்திய வீரங்கனையான அஞ்சும் சுட்டு வீழ்த்திய 591 ஷாட்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த முறை அஞ்சும் 586 ஷாட்கள் சுட்டபோதிலும், 10வது இடத்தை பிடித்ததால் இறுதிப்போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
தகுதி சுற்றில் 594 புள்ளிகள் எடுத்து டாப் இடத்தை பிடித்த நார்வே வீராங்கனை ஜீனெட் ஹெக் டூஸ்டாட். இறுதிப்போட்டியில் 461.5 புள்ளிகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ஹரியானாவை சேர்ந்த நீச்சல் 458 புள்ளிகளுடன் வெள்ளியை வென்றார்.
ஐஎஸ்எஸ்எஃப் ரியோ உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் 16 பேர் கொண்ட இந்திய தொடரில் பங்கேற்றுள்ளது. தற்போது வரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ளது.
ஏற்கனவே மகளிர் 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாளிறவன் தங்கம் வென்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்