தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ms Dhoni: ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்தவர்’! தோனி மீது சக வீரர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் - ஒரு பிளாஷ்பேக்

MS Dhoni: ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்தவர்’! தோனி மீது சக வீரர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் - ஒரு பிளாஷ்பேக்

Jan 08, 2024, 03:37 PM IST

என்னதான் எம்எஸ் தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் அவருடன் விளையாடிய சில முன்னணி வீரர்களே முன் வைத்துள்ளனர். அந்த வகையில் தோனி மீதான குற்றச்சாட்டுகளும், அதை முன் வைத்த வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

  • என்னதான் எம்எஸ் தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் அவருடன் விளையாடிய சில முன்னணி வீரர்களே முன் வைத்துள்ளனர். அந்த வகையில் தோனி மீதான குற்றச்சாட்டுகளும், அதை முன் வைத்த வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.
சர்வேதச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதிலும் தோனி மீதான கவர்ச்சி என்பது குறையாமல் உள்ளது. சொல்லப்போனால் அது அதகரிக்கவே செய்துள்ளது ென்று கூறலாம். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆக்டிவாக இருந்து வரும் தோனி, எந்நேரமும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கலாம்.
(1 / 10)

தோனியின் கேப்டன்சியில் சில வீரர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி புகழின் உச்சியில் இருந்தனர். இவரது தலைமையில் தங்களை வளர்த்து கொண்ட வீரர்கள் தற்போது கிரிக்கெட் உலகை ஆட்சி செயதும்  வருகின்றனர்.  கோடிக்கணக்கானோருக்கு ரோல் மாடலாக இருந்து  வரும் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அமைதியின் மறுஉருவமாகவே திகழ்ந்து வந்துள்ளார்
(2 / 10)

தோனி எப்போதும் இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கி தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்கினார் என அவர் மீது சக வீரர்கள் சிலரே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தோனி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், குற்றச்சாட்டை வைத்த வீரர்கள் பற்றியும் பார்க்கலாம்
(3 / 10)

இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை ஆகிய இரண்டு தொடரின் இறுதிப்போட்டிகளிலும் டாப் ஸ்கோரராக இருந்தவர் கவுதம் கம்பீர். இவர்தான் தோனி மீது அதிக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்
(4 / 10)

உலகக் கோப்பை ஒரு நாள் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் எடுத்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார். ஆனால் ரசிகர்கள் தனது இன்னிங்ஸை விட தோனியின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியதை விமர்சித்தார் கம்பீர். இது தொடர்பாக தனது ஆதங்கத்தை பலமுறை அவர் கொட்டியுள்ளார்
(5 / 10)

தோனியும் - யுவராஜ் சிங்கும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். தோனியை கேப்டனாக்கிய பிறகு சில காலம் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது
(6 / 10)

தோனிக்கு முக்கியத்துவம் அளித்து அவரை கேப்டனாக நியமித்ததற்கு, பிசிசிஐ அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு தோனிக்கு வழங்கப்பட்டதாக யுவராஜ் சிங் குறிப்பட்டார். இந்த விவகாரத்தில் தோனியை நேரடியாக விமர்சித்தார் யுவராஜ் சிங் தந்தையும், முன்னாள் கிரிக்கெட்டருமான யோக்ராஜ் சிங். தோனியால், தனது மகன் யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கையே பறிபோனதாக தெரிவித்தார்
(7 / 10)

மூத்த வீரர்களிடம் தோனியின் அணுகுமுறை குறித்து வெளிப்படையாக விமர்சித்தார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக். 2012 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சேவாக், சச்சின், கம்பீர் ஆகியோர் மெதுவான பீல்டர்களாக குறிப்பிட்ட தோனி, அவர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். தோனியின் இந்த கருத்துக்கு தனது அதிருப்தியை தெரிவித்தார் சேவாக்
(8 / 10)

தோனிதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்து கட்டினார் என ஓய்வுக்கு பின்னர் அதிர்ச்சி கருத்தை தெரிவித்தார்  இந்திய சுழல்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங். 2011 உலகக் கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த பல சீனியர் வீரர்கள் அவர் அணியிலிருந்து தூக்கி எரிந்தார் என்று குறிப்பிட்டார்
(9 / 10)

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் தனது கடைசி ஒரு நாள், டி20 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்று இருந்த- போதிலும் என்னை கழட்டிவிட்டார். இதற்கு காரணமாக 2008 ஆஸ்திரேலியா தொடரில் சரியாக பந்து வீசவில்லை என்று காரணமும் கூறினார்
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை